இபிஎஃப் இணையதளத்தல் பிஎஃப் இருப்பை சரிபார்க்க உங்களுடைய யுஏஎன் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே உங்களுடைய யுஏஎன்-ஐ பயன்படுத்தி இபிஎஃப்ஓ வலைதளத்தில் பிஎப் இருப்பை எவ்வாறு சரிபார்ப்பது என்ற வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்குச் சென்று ‘Our Services’ என்ற டேபுக்குள் செல்ல வேண்டும். இப்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலில் இருந்து For Employees என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து வரும் பக்கத்தில் ‘Member Passbook’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்து உங்களுடைய யுஏஎன் எண், பாஸ்வேர்டு உள்ளீடு செய்த பின் காட்டப்படும் கேப்ச்சா கேள்விக்கு பதில் அளித்தப் பின்னர் ‘Login’ பட்டனை அழுத்த வேண்டும்.
ஒருமுறை நீங்கள் EPF முகப்புப் பக்கத்தில் உள்நுழைந்ததும், அதில் உங்களுடைய பெயர், UAN எண் மற்றும் PAN எண் ஆகியவைக் காண்பிக்கப்படும்.
உங்களது பிஎப் இருப்பைச் சரிபார்க்க விரும்பும் உறுப்பினர் ஐடி எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன்பின்னர் கீழே வரும் பல்வேறு ஆப்ஷன்கள் மூலமாக உங்களுடைய பிஎப் இருப்பைச் சரிபார்க்க முடியும்.
இப்போது நீங்கள் உங்களுடைய பிஎப் கணக்கில் இருக்கும் இருப்பை பார்க்க முடியும். திரையில் தெரியும் அந்தக் கோப்பினை பிடிஎஃப் வடிவத்திலும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.