எத்தனை நாளுக்கு ஒருமுறை ஜீன்ஸ் பேண்டை துவைக்கணும்? கேட்டா அதிர்ச்சி ஆவீங்க!

Washing Jeans Pant Tips: பொதுவாக அனைவரிடமும் இந்த காலகட்டத்தில் ஜீன்ஸ் பேண்ட் இருக்கிறது. அந்த வகையில், ஜீன்ஸ் பேண்டை எத்தனை நாள்களுக்கு ஒருமுறை அதை துவைக்கலாம் என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

  • Sep 13, 2024, 11:45 AM IST

ஒவ்வொரு துணியும் வெவ்வேறு தன்மையை கொண்டது. இங்கு டெனிம் ஜீன்ஸ் உள்ளிட்ட சற்றே உயர் ரக ஜீன்ஸ் பேண்ட்களை மட்டுமே குறிப்பிடுகிறோம்.

 
1 /10

துணி துவைப்பது என்பது வாஷிங் மெஷின் வந்த பிறகு எளிமையாகிவிட்டாலும் கூட நீங்கள் பயன்படுத்தும் ஆடைகளின் தன்மையை பொறுத்து நீங்கள் துவைப்பது அவசியம்.  

2 /10

வாஷிங் மெஷினில் அடிக்கடி துவைப்பதால் சில ஆடைகள் உங்களுக்கு வீணாகியிருக்கலாம். எனவே, புது துணியை எடுக்கும்போது அதை எப்படி துவைக்க வேண்டும் என்ற அறிவுரையை கண்டிப்பாக வாசிக்கவும்.   

3 /10

இப்போது பேச்சிலர்கள் பலரும் கையிலேயே துவைக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அவர்களும் கூட அடிக்கடி துணிகளை துவைத்ததால் அவை வீணாகிவிட்டதாக வருந்தியிருப்பார்கள். எனவே, ஆண்கள் துணி துவைப்பது குறித்து பின்வரும் விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியம்  

4 /10

உள்ளாடைகள், ஜிம்மிற்கு பயன்படுத்தும் வியர்வை நிறைந்த ஆடைகள் அவற்றைதான் ஒருமுறை பயன்படுத்திய பின் உடனே துவைக்க வேண்டும்.   

5 /10

மாறாக அலுவலகத்திற்கு அணிந்துசெல்லும் சில ஆடைகளை நீங்கள் இரண்டு, மூன்று முறை பயன்படுத்தியே பிறகே போடலாம். அது சட்டையாக இருந்தாலும் சரி, பேண்ட்டாக இருந்தாலும் சரி. இது ஆண்களுக்கு மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

6 /10

அப்படியிருக்க ஜீன்ஸை எத்தனை நாளுக்கு ஒருமுறை துவைக்கலாம் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். டெனீம் உள்ளிட்ட தரமான ஜீன்ஸை நீங்கள் வைத்திருந்தால் அதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.   

7 /10

துவைக்கும்போது, அதனை உள்புறமாக மாற்றிக்கொண்டு தரமான டிடர்ஜெண்ட்களை பயன்படுத்தி மெதுவாக துவைக்க வேண்டும். இப்படி துவைத்தால் ஜீன்ஸ் அதன் நிறத்தை இழக்காது. நீங்கள் வாஷிங் மெஷினில் போட்டாலும் இதையே பின்பற்றுங்கள்.   

8 /10

சரி எத்தனை நாளுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும் என கேட்டால், அந்த ஜீன்ஸ் பேண்டில் நாற்றம் வீசும்வரை அல்லது பார்ப்பதற்கு மோசமானவரை நீங்கள் அதை துவைக்க வேண்டாம் என்ற பல ஆடை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். ஜீன்ஸை அணிந்த பிறகு அதில் காணப்படும் நுண்ணுயிரிகள் பெரும்பாலனவை தோல் செல்கள், இயற்கையான எண்ணெய் படிமங்கள்தான். இவை பாதிப்பில்லாதவை. எனவே, அடிக்கடி கழுவுவது தேவையற்றது.  

9 /10

கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும் அதுதான் உண்மை. நீங்கள் கல்லூரி, அலுவலகம் என அதிகம் அழுக்கு ஆகாத, தூசி படியாத இடங்களுக்கு ஜீன்ஸ் பேண்டை போட்டுச் செல்பவராக இருந்தால் அதனை 10 முறை அல்லது அதற்கும் மேல் பயன்படுத்திய பின்னரே துவைக்கலாம் என்கின்றார், நியூயார்க் நகரத்தில் பேஷன் ஸ்டைலிஸ்ட் லானா பிளாங்க்.  

10 /10

எனவே, இத்தனை நாள் இடைவெளியில் துவைக்க வேண்டும் என்றில்லை, ஆனால் அது நாற்றமடிக்கவோ, அழுக்காவோ இல்லையென்றால் துவைப்பது அவசியமில்லை என்கிறார்கள். இப்படி நீங்கள் துவைக்கும்போது ஜீன்ஸ் பேண்ட் அதிக நாள்கள் உழைக்கும் என கூறப்படுகிறது.