இத்தாலி பாராளுமன்ற குடியரசாக மாறியது ஒரு அதிசயம் என்றால், போப் ஒரு கம்யூனிச நாட்டிற்கு வருகை தந்த அதிசய சம்பமும் நடைபெற்ற நாள் இன்று தான்…
சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
Also Read | தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கோரும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள்
2014: இந்தியாவின் 29 வது மாநிலமாக தெலுங்கானா அதிகாரப்பூர்வமாக உருவான நாள் ஜூன் 2
1979: கம்யூனிச நாடான போலந்திற்கு வருகை தந்த முதல் போப் என்ற பெருமை பெற்றார் ஜான் பால் II
1966: அமெரிக்க விண்கலம் சர்வேயர் 1 நிலவில் தடம் பதித்த சரித்திர நாள் இன்று
1953: லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எலிசபெத் II ராணியாக முடிசூட்டப்பட்ட நாள் ஜூன் 2
1946: பாராளுமன்ற குடியரசாக இத்தாலி மாறிய நாள் ஜூன் 2