Karnataka New CM: இந்த ஐவரில் ஒருவரே கர்நாடகாவின் புதிய முதலமைச்சர்!

Karnataka Verdict Day 2023 May 13: கர்நாடக முதலமைச்சராகும் வாய்ப்பு ஒருவருக்கே கிடைக்கும் என்றாலும், பிரகாசமான வாய்ப்பு பலருக்குக் உண்டு. முதல்வராகும் போட்டியில் முன்னணியில் இருக்கும் வேட்பாளர்கல் இவர்கள்...   

இவர்களில் சிலருக்கு, முதலமைச்சர் பதவியைத் தவிர, துணை முதல்வர், அமைச்சர்கள் என பல உயர் பதவியும் கிடைக்கலாம். இவர்கள் போட்டியிடும் தொகுதி விஐபி தொகுதிகளாக உள்ளன.  

மேலும் படிக்க | தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை! கர்நாடக தேர்தல் முடிவை எப்போது, எங்கே, எப்படி தெரிந்து கொள்வது?

1 /6

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கர்நாடக முதல்வர் யார் என்ற முக்கிய கேள்வி மீண்டும் ஒருமுறை கேட்கப்படுகிறது. துணை முதல்வர், முதல்வர், அமைச்சர்கள் என உயர் பதவி யாருக்கு?

2 /6

சித்தராமையா கருத்துக் கணிப்புகளின்படி, இந்த பட்டியலில் முதல் நபர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கே சித்தராமையா ஆவார்.  8 முறை எம்எல்ஏ, கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இது தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று சித்தராமையா கூறியுள்ளார். JD-S இல் இருந்த சித்தராமையா மாநிலத்தில் இரண்டு முறை துணை முதல்வராக பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டு, சித்தராமையா ஜேடி-எஸ்-லிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஒரு வருடம் கழித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் சேர்ந்தார். 13 மே 2013 அன்று கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

3 /6

டி.கே.சிவக்குமார் சிவக்குமார் அல்லது டி.கே அல்லது டி.கே.ஷி கர்நாடகாவில் நன்கு அறியப்பட்டவர், இளைஞர் காங்கிரஸில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கி, 1989 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். ஏழு முறை எம்.எல்.ஏ, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். விவசாய வொக்கலிகா குடும்பத்தைச் சேர்ந்த சிவக்குமார், காங்கிரஸின் பிரச்சனைகளை தீர்ப்பவர். பல நெருக்கடிகளில் இருந்து காங்கிரஸை மீட்டெடுத்துள்ளார்.

4 /6

எச்.டி.குமாரசாமி இரண்டு முறை கர்நாடக முதல்வர் மற்றும் ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) தேசியத் தலைவர், எச்.டி.குமாரசாமி, "குமாரண்ணா" என்று பிரபலமாக அறியப்பட்டவர். இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் எச்டி தேவகவுடாவின் மகன் ஆவார். இவரது சகோதரர் ஹெச்.டி.ரேவண்ணா முன்னாள் அமைச்சரும், ஹோலேநரசிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆவார். அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் அரசியல்வாதிகள்.

5 /6

எடியூரப்பா நான்கு முறை முதல்வராக இருந்த எடியூரப்பா, இன்றுவரை மாநிலத்தின் மிகப்பெரிய லிங்காயத் தலைவராக அறியப்படுகிறார். கர்நாடகாவில் பாஜகவில் இருந்து அதிக காலம் முதல்வராக இருந்தவர். ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா தொகுதியின் எம்.எல்.ஏ.வான இவர், அங்கிருந்து எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

6 /6

பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் தற்போதைய முதல்வரான பஸ்வராஜ் பொம்மையின் தந்தை எஸ்ஆர் பொம்மை மாநிலத்தின் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பசவராஜ் பொம்மை ஜனதா தளம் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அவர் 2008 இல் பாஜகவில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் ஆன இரண்டாவது தந்தை-மகன் ஜோடி இவர்கள். லிங்காயத்துகளுக்குள் ஆதிக்கம் செலுத்தாத சதர்-லிங்காயத் என்ற துணைப்பிரிவைச் சேர்ந்தவர் பசவராஜ் பொம்மை.