சனி பெயர்ச்சி உக்கிரம்.. 2024-ல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை அம்பேல் தான்

Shani Margi 2024: ஜோதிடத்தில், சனிதேவன் நீதியின் கடவுள் என்று விவரிக்கப்படுகிறார். சனி அனைவருக்கும் கெட்ட காரியங்களைச் செய்வது மட்டுமல்லாமல், சிலரின் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

புத்தாண்டுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. புத்தாண்டிலும் சனிபகவான் சில ராசிகளின் மீது தீய பார்வையை செலுத்துவார். இத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சவால்கள் சந்திக்க நேரிடும். சனி தற்போது கும்பத்தில் வக்ர நிவர்த்தி கதியில் உள்ளது. 2024-ம் ஆண்டு சனிபகவானின் ஏழரை, திசை 5 ராசிகளின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த 2024ல் எந்தெந்த ராசிக்காரர்கள் மீது சனியின் தாக்கம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

கடகம்: கடக ராசிககாரர்கள் மீது 2024 இறுதி வரை சனியின் நிழல் இருக்கும். எனவே, இந்த ராசிக்காரர்கள் ஆபத்தான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடக ராசியில் சனி சஞ்சரிப்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு சிறிய தவறு கூட பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடவும்

2 /6

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களும் 2024 இறுதி வரை சனியின் தாக்கத்தில் இருப்பார்கள். இந்த நேரத்தில், அவர்கள் ஆண்டு முழுவதும் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். நிலம், கட்டிடங்கள், வாகனங்கள் விஷயத்தில் அலட்சியம் கூடாது. அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.  பரிகாரம்: அனுமனை வழிபடுங்கள்.

3 /6

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கும். 2024 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்கள் சேவை, தொண்டு, தர்மம் செய்து கொண்டே இருக்க வேண்டும். பரிகாரம்: அனுமனை வழிபட்டால் எல்லாவிதமான தடைகளில் இருந்தும் காக்கும்.

4 /6

கும்பம்: கும்ப ராசிக்காரர்களும் ஏழரை சனியின் தாக்கத்தை அனுபவிப்பார்கள். 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் ஏழரை சனியின் நடுக் கட்டம் இந்த ராசியில் இயங்கும். அத்தகைய சூழ்நிலையில், இவர்கள் வீண் வாதாம், தகராறில் இருந்தும் தங்களைத் தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். பரிகாரம்: சனி தேவரைப் பிரியப்படுத்த சனி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

5 /6

மீனம்: மீன ராசிக்காரர்களும் புத்தாண்டு முதல் சனியின் தாக்கம் இருக்கும். 2024ல் ஏழரை சனியின் முதல் கட்டம் இந்த ராசிக்காரர்களை பாதிக்கும். இதனால் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், கவனமாக இருக்க வேண்டும். பரிகாரம்: அனுமனை வழிப்பட வேண்டும்.

6 /6

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் பொறுப்பேற்காது