ஏழை-எளிய மாணவர்களுக்கு LIC கல்வி உதவித்தொகை! டிம்பர் 22 கடைசி நாள்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

LIC Education Scholarship Latest News: எல்ஐசி பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டம் தொடங்கியது. அரசு அல்லது தனியார் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் விண்ணபிக்கலாம். அதுக்குறித்த தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.

Education Latest Updates: எல்ஐசி பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டம் என்றால் என்ன? இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்? எப்படி விண்ணப்பிப்பது? கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து முழு தகவல் எங்கு கிடைக்கும்? என்பதை பார்ப்போம்.

1 /7

எல்ஐசி வழங்கும் பொன்விழா உதவித்தொகை திட்டத்தின் நோக்கம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குவதாகும்.

2 /7

எல்ஐசி பொன்விழா கல்வி உதவித் தொகை திட்டம் 2024-ன் கீழ், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

3 /7

எல்ஐசி பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டம் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. பொது உதவித்தொகை மற்றும் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு உதவித்தொகை ஆகும்.

4 /7

10 மற்றும் 12-ம் வகுப்பு, டிப்ளமோ அல்லது அதற்கு சமமான சிஜிபிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்வியாண்டு 2024-25-ல் மருத்துவம், பொறியியல், அனைத்து பட்டப் படிப்புகள், ஏதேனும் ஒரு துறையில் பட்டயப் படிப்பில் முதல் ஆண்டு சேர்க்கை பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதேபோல தொழிற்கல்வி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

5 /7

10-ம் வகுப்பு முடித்து 11 ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அல்லது இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரும் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

6 /7

எல்ஐசி கல்வி உதவித்தொகை திட்டம் இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப  கடைசி நாள் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி. 1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், 2. பதிவு என்பதைக் கிளிக் செய்யவும், 3. விண்ணப்பப்பம் ஓபன் ஆகும், 4. தேவையான விவரங்களைப் படிவத்தில் நிரப்பவும், 5. தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும், 6. இறுதியாக விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்கவும்.

7 /7

எல்ஐசி பொன்விழா கல்வி உதவி தொகை திட்டம் குறித்து கூடுதல் தகவல்களை பெற https://licindia.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.