சின்னத்திரை ’சமந்தா’ பிரியங்காவின் பிறந்தநாள் விழா

தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான தொகுப்பாளினியான பிரியங்காவுக்கு பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் வாழ்த்துகளை டன் கணக்கில் அனுப்பி வருகின்றனர்

தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சின்னத்திரையில் புகழின் உட்சத்தில் இருக்கும் பிரியங்காவுக்கு, சமந்தாவின் பிறந்நாளான இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

1 /5

விஜய் டிவியில் முன்னணி பெண் தொகுப்பாளினியாக இருக்கிறார் பிரியங்கா. டிடி-க்குப் பிறகு அந்த தொலைக்காட்சியின் ஒரே ஒரு ஸ்டார் தொகுப்பாளினியாக வலம் வருகிறார்

2 /5

ஆண்டு தோறும் விஜய் டிவி நடத்தும் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் பிரபலமான தொகுப்பாளினி என்ற விருதை, இவருக்கு மட்டுமே கிடைத்து வருகிறது.

3 /5

விஜய் டிவி இவருக்கு கொடுக்கவில்லை என்றால், ரசிகர்களே வசைபாடத் தொடங்கிவிடுவார்கள். அந்தளவுக்கு ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டிருக்கிறார்.

4 /5

பிக்பாஸூக்கு சென்றபோது விமர்சனங்களை சந்தித்தாலும், சிரிப்பால் அந்த விமர்சனங்களை விலக்கிவிட்டு மீண்டும் ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

5 /5

அண்மையில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சி விருதுகள் நிகழ்ச்சியில் கூட இவருக்கு மீண்டும் விருது வழங்கப்பட்டது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் டன் கணக்கில் பிறந்தநாள் வாழ்த்தை அனுப்பி வருகின்றனர்.