சனியின் ராசி மாறப்போகிறது. ஏப்ரல் 29-ம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார். சனி பகவான் இரண்டரை வருடங்கள் கும்ப ராசியில் இருப்பார். ஆனால் இதற்கு முன் சனி பகவான் 33 நாட்கள் மறைந்து இருப்பார். அதன்படி வரும் பிப்ரவரி 22ஆம் தேதி சனியின் உதயம் நிகழும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனியின் அஸ்தமனம் சில ராசிகளுக்கு சுப மற்றௌம் அசுப பலனைத் தரும். அந்த நான்கு ராசிகள் எவை என்று பார்ப்போம்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு வேதனையைத் தரும். வேலையில் தொடர் தோல்வியால் மனம் உளைச்சல் ஏற்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதீத பணச் செலவு காரணமாக வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். இது தவிர உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரலாம். மேலும், வியாபாரத்தில் நிதி இழப்பும் ஏற்படலாம்.
கடகம்: சனி மறைவால், இந்த ராசிக்காரர்கள் சிரமங்களைச் சூழ்ந்து கொள்ளலாம். உத்தியோகத்தில் மன உளைச்சலை சந்திக்க வேண்டி வரும். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களுடன் வாக்குவாதங்கள் வரலாம். பண இழப்பும் ஏற்படலாம். வேலையில் அலட்சியம் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
கன்னி: சனியின் அஸ்தமனத்தால், 33 நாட்களுக்கு வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் காணப்படும். வேலையில் மனம் நிலையாக இருக்காது. இதனால் வேலையில் சிக்கல்கள் ஏற்படலாம். கடின உழைப்புக்கு சாதகமான பலன் கிடைக்காததால் மனம் உளைச்சல் ஏறப்படலாம். அதுமட்டுமின்றி உத்தியோகத்திலும் பிரச்சனைகள் ஏற்படும்.
துலாம்: சனி அஸ்தமனத்தின் மோசமான பலன் இந்த ராசிக்காரர்களுக்குத்தான் இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்கள் வரலாம். நீங்கள் ஒரு சட்ட தகராறில் சிக்கலாம். இதனால் மன உளைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.