உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஜெஃப் பெசோஸின் விவாகரத்துக்கு காரணம் யார் தெரியுமா?

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், உலகின் பணக்காரர். அவர் தனது மனைவி மெக்கென்சியை பெசோஸ் 2019 ஆம் ஆண்டில் திருமணமான 25 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்தார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கென்சி பெசோஸ் ஆகியோர் திருமணமான 25 வருடங்களுக்குப் பிறகு 2019 இல் விவாகரத்து செய்தனர். முன்னாள் ஃபாக்ஸ் லா டிவி தொகுப்பாளரான லாரன் சான்செஸ் என்பவர் பெசோஸ் காதல் வயப்பட்டிருப்பதாக நேஷனல் என்க்யூயர் அண்மையில் செய்தி வெளியிட்டது. ஹாலிவுட் நட்சத்திரம் பேட்ரிக் வைட்செலின் மனைவியான லாரன் சான்செஸ் தான் பெசோஸ் தம்பதிகளின் விவாகரத்துக்கு காரணம்.

Also Read | Jeff Bezos விண்வெளிப் பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய புகைப்படங்கள்

1 /3

1993 ஆம் ஆண்டில் ஜெஃப், மெக்கென்சி ஸ்காட்டை மணந்தார். சியாட்டிலிலுள்ள தனது கேரேஜிலிருந்து அமேசான் நிறுவனத்தை தொடங்கிய போது மெக்கென்சி கணவராக இருந்த ஜெஃப், உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும்போது 2019 இல் விவாகரத்து செய்தார்.   

2 /3

லாரன் வெண்டி சான்செஸ் எம்மி விருது பெற்ற அமெரிக்க செய்தி தொகுப்பாளர், அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பெசோஸின் காதலி.

3 /3

லாரன் சான்செஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் ஜனவரி 2018 முதல் காதலித்து வருவதாக கூறப்படுகிறது, அவர்கள் 2018 ஆம் ஆண்டில் ஒன்றாக உணவருந்தும் புகைப்படம் வெளியாகி வைரலானது.