ஹீரோவாக அறிமுகமாகும் தோனி! அதுவும் இந்த படத்திலா?

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படமான புதுமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கிய ரோம்-காம் 'எல்ஜிஎம்' படம் ஜூலை 28 அன்று திரைக்கு வர உள்ளது.

 

1 /4

பழம்பெரும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் தோனி என்டர்டெயின்மென்ட் மூலம் எல்ஜிஎம் படத்தை தயாரித்துள்ளனர், இது அவர்களின் முதல் முயற்சியாகும்.  

2 /4

தற்போது, ​​இந்த படம் தோனியின் அறிமுக படமாகவும் அமையும் என்று செய்தி வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வீரர் தோனி இதற்கு முன் பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.   

3 /4

சமீபத்திய தகவல்களின்படி, தல தோனி எல்ஜிஎம் படத்தில் சிறப்பு கேமியோ ரோலில் நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது.  இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் LGM படம் தோனியின் முதல் படமாக அமையும்.  

4 /4

எல்ஜிஎம் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய், ஸ்ரீநாத், விடிவி கணேஷ், வினோதினி, தீபா சங்கர், விக்கல்ஸ் விக்ரம், விக்கல்ஸ் ஹரி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ரமேஷ் தமிழ்மணி, ஒளிப்பதிவு ஒடுக்கத்தில் விஸ்வஜித், படத்தொகுப்பு பிரதீப் இ ராகவ்.