சனி-ராகுவின் ஆபத்தான சேர்க்கை..இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

Shani Nakshatra Gochar 2023: சனி-ராகு சேர்க்கை சனியின் நட்சத்திர மாற்றத்தால் உருவாகிறது, இது சிலரது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும். மேலும் இந்த ராசிக்காரர்கள் அக்டோபர் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சனி பெயர்ச்சி 2023: நீதியின் கடவுளான சனி தற்போது கும்பம் மற்றும் சதய நட்சத்திரத்தில் இருக்கிறார். ஜோதிடத்தில் ராகுவை சதய நட்சத்திரத்தின் அதிபதி என்று கூறப்படுகிறது. தற்சமயம் சனிபகவான் சதய நட்சத்திரத்தின் 1ம் பாதத்தில் இருக்கிறார், அக்டோபர் 17 வரை 1ம் பாதத்தில் தான் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சனியின் பெயர்ச்சியால் பெரிய மாற்றம், மேலும் இதன் தாக்கம் அக்டோபர் 17 வரை சிலருக்கு மிகவும் சிரமமாக இருக்கும். எனவே அக்டோபர் 2023 வரை எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /5

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு, சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் சேர்க்கை நல்ல பலனை தராது. ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். இரகசிய எதிரிகள் உங்களை கஷ்டப் படுத்தலாம்.  

2 /5

கன்னி ராசி: அக்டோபர் 17, 2023 வரையிலான காலம் கன்னி ராசியினருக்கு நிதிச் சிக்கலைத் தரும். பரிவர்த்தனைகள் தொடர்பான முடிவுகளை மிகவும் கவனமாக எடுங்கள். வியாபாரத்தில் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்காது. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.  

3 /5

விருச்சிக ராசி: இரத்தம் அல்லது இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்படலாம், இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.  

4 /5

கும்ப ராசி:  இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும், செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை, சர்ச்சைகள் ஏற்படலாம்.  

5 /5

மீன ராசி: ராகுவின் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த ராசிக்காரர்களின் உடல்நலம் மேசமடையலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம்.