பல நாடுகள் தங்கள் நாட்டின் பெயரை அதிகாரபூர்வமாக மாற்றியுள்ளது.
Turkey - Turkiye : துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் டய்யிப் எர்டாகன் சமீபத்தில் நாட்டின் பெயரை Turkey என்பதிலிருந்து Turkiye என்று அதிகாரபூர்வமாக மாற்றியுள்ளார். தற்போது Turkey என்பது Turkiye என்று அழைக்கப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில் Turkiye என்கிற பெயர் நாட்டின் கலாச்சாரம், மதிப்பு, நாகரீகம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஹாலந்து - நெதர்லாந்து : கடந்த ஜனவரி 2020ம் ஆண்டு சந்தைப்படுத்துதல் நடவடிக்கைக்காக இந்நாட்டின் பெயரை அரசு அதிகாரபூர்வமாக மாற்றியது. தற்போது ஹாலந்து நாடு நெதர்லாந்து என்று அழைக்கப்படுகிறது.
சிலோன் - ஸ்ரீ லங்கா : 1505ல் போர்ச்சுகீசியர்கள் இந்நாட்டை கண்டறிந்த போது சிலோன் என்கிற பெயரை வழங்கினர். பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்நாடு சுதந்திரத்திற்கு பின்னர் தனிச்சையானது. இந்நாட்டின் பெயரை நீண்ட நாட்களாக அரசு மாற்ற திட்டமிட்டு இறுதியில் 2011ம் ஆண்டு பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்றியது.
சியாம் - தாய்லாந்து : சியாம் என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் உள்ள ஷ்யாமா என்கிற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இது கருப்பு அல்லது அல்லது பழுப்பு என்று பொருள், இது உடல்நிறத்தை குறிப்பதாக அமைகிறது. சியாம் என்கிற பெயர் 1939ல் தாய்லாந்து என்று மாற்றப்பட்டது, பின்னர் 1946-1948 வரை மீண்டும் சியாம் என்று அழைக்கப்பட்டு மீண்டும் 1948ல் தாய்லாந்து என்று அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது.
பர்மா - மியான்மர் : 1989ல் ராணுவ அரசாங்கம் நாட்டின் பெயரை பர்மாவிலிருந்து மியான்மர் என்று மாற்றியது. இருப்பினும் இன்றளவும் பல ஆசிய நாடுகள் இந்நாட்டின் பெயரை பர்மா என்று அழைக்கவே விரும்புகின்றனர்.