Made in India Electric Scooter: நாட்டில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான மோகம் அதிகம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாசு மற்றும் பெட்ரோல்-டீசல் விலை காரணமாக, மக்கள் பெரும்பாலும் மின்சார ஸ்கூட்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மின்சார வாகனங்களின் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சந்தையில் புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்கின்றன. வயதின் அடிப்படையிலும் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம் ஆகின்றன. 12 முதல் 18 வயதுடையவர்கள், உரிமம் இல்லாமல் ஸ்கூட்டர்களை இயக்கக்கூடிய வகையில், பல நிறுவனங்கள் பிரத்யேகமான மின்சார ஸ்கூட்டர்களையும் அறிமுகம் செய்கின்றன.
Corrit Electric நிறுவனமும் தனது மின்சார ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனம் அப்னா ஹோவர் என்ற மின்சார ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இது இந்த மாத இறுதியில் அறிமுகம் ஆக உள்ளது. இளைய தலைமுறையினரை சிறப்பாக ஈர்க்கும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.
கோரிட் ஹோவர் ரூ .74,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இது வாடிக்கையாளர்களுக்கு ரூ .69,999 என்ற விலையில் வழங்கப்படும். முன்பதிவு செய்ய, வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ .1,100 செலுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்கூட்டரின் விநியோகம் நவம்பர் முதல் தொடங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. ஸ்கூட்டர் சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
கோரிட் எலக்ட்ரிக் தங்களது ஸ்கூட்டர் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இதை ஓட்ட ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. ஆகையால் அதன் டாப் ஸ்பீட் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹோவர் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் ஒரு மணி நேரத்துக்கு 25 கிமீ ஆகும்.
ஹோவர் அதிகபட்சமாக 250 கிலோ எடையை எளிதில் சுமக்க முடியும். இந்த நாட்களில் மக்கள் தடிமனான சக்கரங்கள் கொண்ட சைக்கிள்கள் மற்றும் பைக்குகளை விரும்புகிறார்கள். இந்த நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன் தடிமனான டயர்கள் காரணமாக அனைவரையும் கவர்கிறது. அவை டியூப்லெஸ் மற்றும் டிஸ்க் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, டூயல் ஷாக் அப்சார்பரும் இதில் கிடைக்கிறது.
ஹோவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவது குறித்து கோரிட் எலக்ட்ரிக் அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். அதாவது முதலில் இதை டெல்லியில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் பிற நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.