7 South Indian Biryanis: இன்னும் சில நாள்களில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தென்னிந்தியாவில் அதிகம் பிரபலமான மற்றும் ருசியில் மக்களை அடிமையாக்கும் 7 பிரியாணிகளை இங்கு காணலாம்.
இதில் ஒவ்வொரு பிரியாணியும் அதன் அரிசி மற்றும் மாசாலா பொருள்களில் வேறுபடும். சுவை வேறுபட்டாலும் ருசி உங்களை சொக்கவைக்கும்.
வரும் ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான 7 பிரியாணிகளை இங்கு காணலாம்.
ஹைதராபாதி பிரியாணி: இது தெலுங்கு பேசும் மக்களின் மிகவும் பிரியமான உணவுமாகும். இந்த பிரியாணியின் தனிச்சுவைக்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பாஸ்மதி அரிசிதான். இதில் நறுமணத்தை கூட்டும் பல மசாலாக்கள் சேர்க்கப்படும். சிக்கன், மட்டன் இரண்டிலும் இது ருசியாகவே இருக்கும்.
பட்கலி பிரியாணி: கர்நாடகாவின் கடலோத்தில் இருக்கும் பட்கல் நகரத்தில் இது மிகவும் பிரபலம் என்பதால் பட்கலி பிரியாணி என பெயர் பெற்றது. இதுவும் பாஸ்மதியால் செய்யப்படுவதுதான். நறுமணம் அளிக்கும் மசாலாக்களும் அதிகமிருக்கும். இதில் இறால் மீன்களை சேர்ப்பார்கள்
மலபார் பிரியாணி: கேரளாவின் மலபார் பிரதேசத்தில் இது பிரபலமாகும். இது ஜீரகசாலா என்ற அரிசியில் செய்யப்படுகிறது. இதன் தயாரிப்பில் தேங்காயும் சேர்க்கப்படுவதுதான் கூடுதல் ஸ்பெஷல்
செட்டிநாடு பிரியாணி: தமிழ்நாட்டின் காரைக்குடி போன்ற செட்டிநாடு பகுதியில் பிரபலமானது இது. இதன் சுவை தன்னிகரற்றது.
தலச்சேரி பிரியாணி: இதுவும் கேரளாவில் ஸ்பெஷல் ஆகும். இது சிறப்பான பிரத்யேக அரிசியில் செய்யப்படும். இதன் அரிசிதான் அதன் ருசிக்கு முக்கிய காரணம்.
திண்டுக்கல் பிரியாணி: இதுவும் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. இது ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படுகிறது.
ஆம்பூர் பிரியாணி: தமிழ்நாட்டில் பிரபலமான மற்றொரு பிரியாணி இதுதான். இதில் மட்டன் மற்றும் சிக்கனை வைத்தும் செய்யலாம், ருசி அருமையாக இருக்கும்.