Chevalier Aruna Sairam: கர்நாடக இசையின் அற்புதமான அழகையும் நுணுக்கத்தையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதிலும் பரப்பிய திருமதி அருணா சாய்ராமுக்கு செவாலியே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
கர்நாடக இசைப் பாடகி, இசையமைப்பாளர் திருமதி அருணா சாய்ராமுக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது
இந்திய அரசின் பத்மஸ்ரீ, மியூசிக் அகாடெமியின் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிரஸின் "உயர் சிறப்பு விருது" பெற்றவர் பாடகி அருணா சாய்ராம்
பிரெஞ்சு மற்றும் சர்வதேச கலை உலகிற்கு அருணா சாய்ராமின் கணிசமான பங்களிப்புகளுக்காக செவாலியர் விருது
கர்நாடக இசையின் அற்புதமான அழகையும் நுணுக்கத்தையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் பரப்பியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. தனது செயல்பாடு மற்றும் உங்கள் படைப்புகள் மூலம் கர்நாடக இசை உலகில் புரட்சியை ஏற்படுத்தியது, பிரெஞ்சு கலைஞர்களுடனான பல கூட்டு நிகழ்ச்சிகள் மூலம், பிரான்ஸ் மற்றும் இந்தியாவை நெருக்கமாக கொண்டு வரவும், இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் கலை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அருணா சாய்ராம் பங்களித்துள்ளார்
கடமையை சரியாக செய்ததற்கு விருது: அருணா சாய்ராம் நெகிழ்ச்சி
நான் செய்து வரும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இது வழங்குகிறது. பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என அருணா சாய்ராம் தெரிவித்தார்
செவாலியே அருணா சாய்ராம்