Mobile Games: இந்தியாவில் உருவாக்கப்பட்ட சூப்பர் 5 மொபைல் கேம்கள்

மொபைல் விளையாட்டுகளின் விருப்பமானவர்கள் எப்போது PUBG இந்தியாவிற்கு திரும்பும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வரும், ஆனால் வருமா என்றும் தெரியாது. எனவே கவலையில்லாமல் இந்தியாவின் சிறந்த 5 இந்திய மொபைல் கேம்களை விளையாடி மகிழுங்கள்.  

ஸ்மார்ட்போன்கள் விலை மலிவானதும், சுலபான இணையத் தொடர்பும் இந்தியாவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மொபைல் கேமிங் துறை, மிகப் பெரிய சந்தையை கொண்டுள்ளது. மொபைல் கேமிங் என்பது மக்களின் வாழ்க்கையில் பொழுதுபோக்குக்கான முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

உங்களை மகிழ்விக்கும் சிறந்த 5 இந்திய மொபைல் கேம்களின் பட்டியல் இது… 

Also Read | 7th Pay Commission, பயனுள்ள அண்மைத் தகவல்கள்; வீட்டு வாடகை, ஊதியம்

1 /5

PUBG போட்டியாளரான FAUG மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, PUBG இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. FAUG மொபைல் விளையாட்டு ஒரு சதித்திட்டத்துடன் தொடங்குகிறது, இது கால்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தின் மூலம் விளையாட்டாளர்களை அந்த களத்திற்கே அழைத்துச் செல்கிறது, சீன ராணுவம் இந்தியாவை கைப்பற்ற முயற்சிக்கும்போது, விளையாட்டாளர்கள் இந்திய வீரர்களை காப்பாற்றுகிறார்கள். விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமானது, பொழுதுபோக்காகவே பல விஷயங்களை கற்க உதவுகிறது. PUBGக்கு மிகச் சிறந்த மாற்று FAUG மொபைல் கேம். 

2 /5

COVID-19 லாக்டவுன் கட்டத்தில் லூடோ கிங் பரவலான வரவேற்பைப் பெற்றது. தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து இணைந்திருக்க முடிந்தது. வேறு பொழுதுபோக்குகளுக்காக வெளியே செல்ல முடியாத நிலையில், பழைய காலங்களை நினைவூட்டும் லுடோ பிரபலமானது. அனைவரும், தங்கள் குழந்தை பருவத்தில் லுடோ விளையாடியிருப்பார்கள். எளிய பலகை விளையாட்டு என்றாலும், வலுவான உணர்வு ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளது. அதை பயன்படுத்தி டிஜிட்டல் மல்டிமீடியாவின் காலத்தில் லுடோ புத்துயிர் பெற்றது.    

3 /5

அமெரிக்காவிற்குப் பிறகு WWE விளையாட்டுக்கான மிகபெரிய சந்தை இந்தியா. இதன் அடிப்படையில் இந்த விளையாட்டை மொபைலில் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். WWE ரேசிங் ஷோடவுன் இரண்டு பிரபலமான விளையாட்டுகளின் கலவையாகும்; WWE மற்றும் பந்தய விளையாட்டை இணைத்து இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.  

4 /5

உங்களுக்கு FAUG விளையாட்டு பிடிக்கும் என்றால் Indian Air Force விளையாட்டை விரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த விளையாட்டுக்கு வீரர்கள் IAF ஏர் வாரியராகவே மாறிவிடுவார்கள்.  எதிரிகளுடன் சண்டையிட்டு, இந்திய எல்லைகளை பாதுகாத்து மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் விளையாட்டு இது. ஒற்றை-பிளேயர் மற்றும் மல்டிபிளேயர் என்ற பயன்முறையில், தனியாகவோ அல்லது பிறருடன் சேர்ந்தோ இந்த விளையாட்டை விளையாடலாம். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

5 /5

கிரிக்கெட் இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு. நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர், ரியல் கிரிக்கெட் 20 இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது. கூகிள் பிளே ஸ்டோரில் 1 கோடிக்கு மேற்பட்டவர்கள் இந்த விளையாட்டை டவுன்லோடு செய்துள்ளனர்.