பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் தக்ஸ்! பிருந்தா மாஸ்டரின் அடுத்த படம்!

'ஹே சினாமிகா' படத்தை தொடர்ந்து பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் இரண்டாவதாக 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' என்கிற படம் வெளியாகவுள்ளது.

 

1 /5

திரையுலகின் பிரபலமான நடன மாஸ்டர்களுள் ஒருவராக இருக்கும் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' படம் பிப்ரவரி 24ம் தேதியன்று திரையரங்கில் வெளியாகுகிறது.  

2 /5

'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ரியா ஷிபு மற்றும் எம்.மும்தாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.  படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்புக்குழு சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.  

3 /5

இந்த படத்தில் ரிது ஹரோன், பாபி சிம்ஹா, முனீஷ்காந்த், விக்ராந்த் மஸ்ஸே, தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், ஹிருது ஹாரூன் ஆகிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

4 /5

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.  இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து இருக்கிறார்.  

5 /5

கன்னியாகுமாரி பகுதியில் வாழும் சில கும்பலின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் விஷயங்களும், பல வன்முறை காட்சிகளும் இப்படத்தில் நிறைந்துள்ளது.