Bike Mileage Tips: பைக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பைக் அதிகபட்ச மைலேஜ் கொடுக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. சில உதவிக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் பைக்குகளின் மைலேஜை மேம்படுத்த முடியும். உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவல்ல சில எளிய டிப்ஸ் இதோ.
நீங்கள் பைக் ஓட்டும் முறை உங்கள் மைலேஜை பெரிதும் பாதிக்கிறது. நீங்கள் பைக்கை எந்த அளவுக்கு வேகமாக ஓட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் பைக்கின் மைலேஜ் மோசமடையும். பைக்கை ஓட்டும்போது வேகத்தில் கவனமாக இருப்பது அவசியமாகும்.
எந்தவொரு வாகனத்தின் மைலேஜையும் பராமரிக்க, நீங்கள் அவ்வப்போது அந்த வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டும். சர்வீசின் போது, உங்கள் பைக்கின் என்ஜின் எண்ணெய் மாற்றப்பட்டு பைக்கில் உள்ள சிறிய குறைபாடுகளும் அகற்றப்படும்.
எரிபொருள் நிரப்பப்படும்போது பைக்கில் தரமான எரிபொருள் நிரப்பப்படுகிறதா என்பதை பெரும்பாலும் மக்கள் கவனிப்பதில்லை. நீங்கள் பைக்கில் நல்ல தரமான எரிபொருளை நிரப்பினால், உங்கள் பைக் அதிக மைலேஜ் தரும்.
நீங்கள் நகரத்திற்குள் பைக் சவாரி செய்யும்போது சிக்னலில் சிவப்பு விளக்கு இருந்து 1 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டி இருந்தால், உங்கள் பைக்கின் எஞ்சினை அணைத்து விடுங்கள். நீங்கள் இப்படி செய்தால், உங்கள் மைலேஜ் பெரிய அளவில் மேம்படும்.
உங்கள் பைக்கில் எப்போதும் நல்ல தரம் வாய்ந்த டயர்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பைக்கை ஓட்டும்போது கியர் மற்றும் பிரேக்குகளை கவனமாகப் பயன்படுத்துங்கள். இதனுடன், வேக பராமரிப்பிலும் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.