Ben Stokes Retirement: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களில் அதிகம் சம்பாதித்த ஸ்டோக்ஸ் சொத்து மதிப்பு!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களில் அதிகம் சம்பாதித்த பென்ஸ்டோக்ஸ் திடீரென ஓய்வை அறிவித்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 /5

இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2 /5

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு அவர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற இருக்கிறார்.

3 /5

டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருக்கிறார். அவருக்கு வயது 31. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில், 39-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். 

4 /5

பென் ஸ்டோக்ஸ்  அதிக சம்பளம் வாங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரராகவும் இருக்கிறார். ECB பென் ஸ்டோக்ஸுக்கு $3.36 மில்லியன், அதாவது ஆண்டுக்கு 27 கோடி ரூபாய் ஊதியமாக கொடுக்கிறது. 

5 /5

11 மில்லியன் டாலர்களுக்கு மேல் அதிபதியாக இருக்கும் அவர், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் மூலமும் அதிகம் சம்பாதிக்கும் வீரராக இருக்கிறார்.