Fake Currency: போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு, அடையாளம் காண்பது எப்படி? - RBI

நிதி விழிப்புணர்வு வாரத்தை துவக்கி வைத்த இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளின் உண்மையான மற்றும் போலி அடையாளம் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொண்டது. ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் நிதி விழிப்புணர்வு வாரத்தை கொண்டாடுகிறது.

புதுடெல்லி: லக்னோவில் போலி ரூபாய் நோட்டுகள் அதிகம் புழங்கப்படுவதாக தெரிகிறது. 50 மற்றும் 200 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அங்கு அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. நிதி விழிப்புணர்வு வாரத்தைத் தொடங்கி வைத்த இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குனர் லக்ஷ்மிகாந்த் ராவ்,  ரூபாய் நோட்டுகளை கண்டறிவது குறித்த ஆலோசனைகளை    வழங்கினார். 

Also Read | இந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..!!!

1 /11

வங்கியின் சேவையில் திருப்தி அடையவில்லை அல்லது வங்கியின் எந்தவொரு அமைப்பிலும் சிக்கல் இருந்தால், அதைப் பற்றி நீங்கள் புகார் செய்யலாம். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக லோக்பாலுக்கு புகார் அளிக்க, நீங்கள் அதன் வலைதளத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். 

2 /11

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் நிதி விழிப்புணர்வு வாரத்தை அனுசரிக்கிறது. விழிப்புணர்வு வார விழாவில், பத்து, இருபது, ஐம்பது, நூறு மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் உண்மையான மற்றும் போலி நாணயத்தை அடையாளம் காண்பது குறித்து ரிசர்வ் வங்கி கூறியது.

3 /11

நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றிடத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல நேர்க்கோடுகளும் இருக்கும்.

4 /11

வலதுபுறத்தில் அசோக தூண் சின்னம், மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் எலெக்டோப் வாட்டர்மார்க் இருக்கும்.  

5 /11

பூ அடையாளம்: வாட்டர் மார்க் பகுதியின் வலதுபக்கத்தில் முன்னும் பின்னும் பூ இதழ்கள் போல இருக்கும் அடையாளத்தை சாய்த்து பார்த்தால் ரூபாய் நோட்டின் மதிப்பு அச்சிடப்பட்டிருக்கும்

6 /11

அடையாளக் குறியீடு: ரூபாய் நோட்டுகளின் மதிப்புக்கு ஏற்றவாறு தொட்டு உணரும் வண்ணம் இந்த குறியீடு இருக்கும்.

7 /11

கம்பி இழை: ரூபாயின் நடுவில் விட்டுவிட்டு இருக்கும் கம்பி இழை யைத் தூக்கிப் பார்த்தால், ஆர்.பி.ஐ. என்று ஆங்கிலத் திலும், பாரத் என்று இந்தியிலும் எழுதியிருக்கும். நோட்டின் முன்பக்கத்தில் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும், 45 டிகிரி சாய்த்து பார்த்தால் நீல நிற மாகவும் இது இருக்கும்.

8 /11

மறைந்திருக்கும் மதிப்பு: மகாத்மா காந்தியின் வலது பக்கத்தில் இருக்கும் செவ்வகப் பட்டையினுள் ரூபாயின் மதிப்பு அச்சிடபட்டி ருக்கும். இது 45 டிகிரி கோணத்தில் சாய்த்து பார்க்கும்போது தெரி யும்.

9 /11

மாறும் நிறம்: 500 ரூபாய் நோட்டில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ரூபாயின் நிறத்தை சாய்த்து பார்த்தால், நீல நிற மாக மாறும்.

10 /11

அசல் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் வங்கியின் பெயர், ரிசர்வ் வங்கி கவர்னர் கையப்பம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அடையாள குறியீடு போன்றவை அச்சிடப்பட்டிருக்கும்

11 /11

26 ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசு ஒரு ரூபாய் நோட்டு அச்சிடுவதை நிறுத்தியது