விஜய்யின் தாயுடன் பிக்பாஸ் வனிதா மற்றும் ஜோவிகா! வைரல் புகைப்படங்கள்..

Vanitha Vijaykumar And Jovika With Shoba : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற வனிதா விஜயகுமார் மற்றும் ஜோவிகா விஜயகுமார், நடிகர் விஜய்யின் தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Vanitha Vijaykumar And Jovika With Shoba : தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள், மிகவும் பிரபாமான நிகழ்ச்சியாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், நடிகர் விஜயகுமாரின் மகள், வனிதா. இவரது மகள் ஜோவிகாவும் தற்போது நடைப்பெற்று முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்களிடையே பிரபலமானார். இவர் தற்போது ஒரு படத்தில் கமிட்டாகி, நடித்துக்கொண்டிருக்கிறார். இப்பட நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது, அதில் வனிதா நடிகர் விஜய்யின் தாயாருடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர். 

1 /7

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து தற்போது சில படங்களில் நடித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். 

2 /7

தனது தாயை போலவே, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து பிரபலமானவர் ஜோவிகா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஷயங்களும் இவர் செய்த செயல்களும் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டன. 

3 /7

ஜோவிகா, தற்போது டீன்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பார்த்திபன் இயக்குகிறார். இந்த படத்தின் முக்கிய விழா ஒன்று சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

4 /7

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய்யின் தாயார் ஷோபாவும் வருகை தந்திருந்தார். அவருடன் வனிதா விஜயகுமார் எடுத்திருந்த செல்ஃபி. 

5 /7

வனிதா, 1995ஆம் ஆண்டு வெளியான ‘சந்திரலேகா’ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்திருந்தார். இவரது குடும்பமும் நடிகர் விஜய்யின் குடும்பமும் சினிமா பின்னணியை சேர்ந்தது என்பதால், இவர்கள் குடும்ப நண்பர்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

6 /7

ஷோபாவுடன் எடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள வனிதா, அவருடன் நிறைய பேசியதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 

7 /7

வனிதா வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.