சனி-ராகுவின் அசுப யோகம்.. அக்டோபர் 17 வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை

Shani Rahu Yuti 2023: வேத ஜோதிடத்தில், சனி மற்றும் ராகு இரண்டும் மிக முக்கியமான கிரகங்களாகக் கருதப்படுகின்றன. சனி மற்றும் ராகுவின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நிச்சயமாக பாதிக்கும். சனி அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம், அதே சமயம் ராகு எப்போதும் தலைகீழ் திசையில் நகரும். இந்த இரண்டு கிரகங்களும் ராசியை மாற்றும்போது, ​​​​அதற்கும் பலன் உண்டு.

சனி ராகு சேர்க்கை: சனி, ராகு சேர்க்கையால் கஷ்டங்களைச் சந்திக்கப் போகும் 5 ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

 

1 /8

சதய நட்சத்திரத்தில் சனி: சனி தற்போது கும்ப ராசியில் இருக்கிறார் ராகு விரைவில் ராசி மாற உள்ளது. அதேசமயம் சனி சதய நட்சத்திரத்தில் சஞ்சரித்திறார். அக்டோபர் 17 வரை இந்த ராசியில் தான் இருப்பார்கள். இந்த வகையில் அக்டோபர் 17ம் தேதி வரை சனிபகவான் சதய நட்சத்திரத்தில் தங்கியிருப்பதால் சனி-ராகு இணைவதால் அசுப யோகம் உருவாகியுள்ளது.  

2 /8

சனி ராகு சேர்க்கை 2023: சதய நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார், இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பது சில ராசிக்காரர்களுக்கு அசுபமாக அமையும். அத்தகைய சூழ்நிலையில், அந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே சனி-ராகு கூட்டணி எந்தெந்த ராசிக்காரர்களை பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.   

3 /8

கடக ராசி: கடக ராசிக்காரர்கள் வேலை தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வெளியே செல்லும் முன் எச்சரிக்கையாக இருக்கவும்.  

4 /8

கன்னி ராசி: அக்டோபர் 17 வரை சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கன்னி ராசிக்காரர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கலாம். பண இழப்பும் ஏற்படலாம். பணிகளில் தொடர் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். இந்த நேரத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் எந்த புதிய முடிவும் எடுக்க வேண்டும்.  

5 /8

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்கள் சனி-ராகு இணைவதால் சிறுசிறு இழப்புகளைச் சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். அக்டோபர் 17ஆம் தேதிக்குள் சனி-ராகு இணைவதால் உங்கள் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.  

6 /8

கும்ப ராசி: சனி பகவான் சிக்கல் மேல் சிக்கல்களை உங்களுக்குக் கொடுக்க தயாராக இருக்கிறார். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. மற்றவர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது பல சிக்கல்களைத் தீர்த்துவிடும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப அமைதியில் சிக்கல்கள் உண்டாகும்.  

7 /8

மீனம் ராசி: சதய நட்சத்திரத்தில் சனி-ராகு இணைவதால் மீன ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் ஏற்படும். இந்த ராசிக்காரர்கள் சில பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் போகலாம், அதனால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். வேலை செய்பவர்களுக்கு வரும் சில நாட்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.