Benefits of Taking One Spoon of Soaked Fenugreek: சமையலில் தினமும் பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஒன்றான வெந்தயம், நோயற்ற வாழ்விற்கு வரப் பிரசாதமாக இருக்கும் ஒரு மசாலா என்றால் மிகையில்லை.
வெந்தயம் உணவில் சேர்ப்பதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நம் முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். அதனால்தான் அதனை தவறாமல் பயன்படுத்தி வந்தனர்.
வெந்தயத்தை நாம், தோசை மாவு தயாரிக்கும் போதும், சமையலில் தாளிப்பதற்கும் பயன்படுத்தினாலும், வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் வியக்கத்தக்க நன்மைகள் அறிந்து கொள்ளலாம்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் நிலையில், மலச்சிக்கலுக்கு தீர்வைத் தருகிறது. அதோடு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குகிறது.
நீரழிவு நோயாளிகளுக்கு வெந்தயம்,, மருந்தைவிட மேலானது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த வெந்தயம், கொலஸ்ட்ராலை எரிக்க பெரிதும் உதவும். இதன் மூலம் மாரடைப்பு அபாயம் பெருமளவு தடுக்கப்படும்.
உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள், காலையில் ஊற வைத்த வெந்தயத்தை நிச்சயம் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி மெடபாலிசத்தையும் அதிகரிக்கிறது.
மாதவிடாயின் போது ஏற்படும் வலி, வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு, வெந்தயம் அருமருந்தாகும்.
பாலூட்டும் தாய்மார்கள் வெந்தயத்தை நிச்சயம் சாப்பிட வேண்டும். தாய்ப்பால் ஊருவதற்கு மிகவும் உதவுகிறது. இதிலுள்ள அண்டிஆக்ஸிடண்டுகள் உடல் வீக்கத்தையும் குறைக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.