Lal Salaam: லால் சலாம் படத்தில் கவனிக்கத்தக்க 5 அம்சங்கள்!

Lal Salaam Movie: ரஜினிகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம், லால் சலாம். இந்த படம், நாளை (பிப்ரவரி 9) வெளியாகிறது. இப்படத்தில் கவனிக்கத்தக்க சில அம்சங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?

1 /7

ரஜினிகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம், லால் சலாம். இவர், இதில் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படம் நாளை (பிப்ரவரி 9) வெளியாக உள்ளது. 

2 /7

லால் சலாம் படம், பொங்கல் பண்டிகையின் போதே வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக இந்த ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இறுதியாக, படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் கவனிக்கத்தக்க அம்சங்கள் சில இருக்கின்றன. அவை என்னென்ன என்று இங்கு பார்ப்போம். 

3 /7

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 9 வருடங்கள் கழித்து படம் இயக்கியிருக்கிறார். 3, வை ராஜா வை ஆகிய படங்களை அடுத்து, அவர் லால் சலாம் படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம், இவரது கம் பேக்காக பார்க்கப்படுகிறது. இது, லால் சலாம் படத்தில் கவனிக்கத்தக்க அம்சங்களுள் ஒன்றாகும். 

4 /7

நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ் திரையுலகில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அதுவும், இவரது கதாப்பாத்திரம் 40 நிமிடங்களுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் மூலம் அவர் முதன் முதலாக இஸ்லாமிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

5 /7

விஷ்ணு விஷால், லால் சலாம் படம் மூலம் இரண்டாவது முறையாக கிரிக்கெட் தொடர்பான படத்தில் நடிக்கிறார். இதுவும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஒரு விஷயமாகும். 

6 /7

லால் சலாம் படத்தில், ரஜினிகாந்துடன் சேர்ந்து 90ஸ்களின் நடித்திருந்த நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்திருக்கின்றனர். செந்தில், ஜனகராஜ் ஆகியோர் லால் சலாம் படத்தில் நடித்துள்ளனர். 

7 /7

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அனைத்து படங்களிலுமே கவனம் ஈர்க்க கூடியவையாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் ஏஐ பயன்படுத்தி, பம்பா பாக்கியா, ஷாஹுல் அஹமத் ஆகியோரின் வாய்ஸை உருவாக்கி பாடல் அமைத்திருக்கிறார்.