IPL 2020 இறுதிப்போட்டிக்கு பிறகு வீரர்களுக்கு பரிசுமழை, in pics

ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. 

ஐபிஎல் 2020 இன் இறுதிப் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை இண்டியன்ஸ் அணி சரித்திரம் படைத்தது. இந்த சீசனில் யார் யாருக்கு எந்தெந்த விருது கிடைத்தது என்பதை பார்க்கலாம்.  

Photo Credit-BCCI/IPL

1 /8

ஐபிஎல் 2020 இன் இறுதிப் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை இண்டியன்ஸ் அணிக்கு கிடைத்த பரிசுக்கோப்பை  Photo Credit-BCCI/IPL

2 /8

ஐபிஎல் 2020 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் மும்பை ஐ.பி.எல்லின் 5 வது சாம்பியனானது. இந்த சீசனின் பட்டத்தை வென்ற மும்பை இண்டியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசும், வெற்றிக்கோப்பையும் பரிசாக கிடைத்தது.   Photo Credit-BCCI/IPL

3 /8

ஐபிஎல் 13 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்ற டெல்லி கேபிடல்ஸ், ரன்னர்-அப் ஆக 12.5 கோடி ரூபாய் பரிசை வென்றது.  Photo Credit-BCCI/IPL

4 /8

கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த சீசனில் 14 போட்டிகளில் 670 ரன்கள் எடுத்தார். ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடித்த   லோகேஷ் ராகுலுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அத்துடன் ஆரஞ்சு கேப் (Orange Cap) பரிசையும் பெற்றார் ராகுல்.    Photo Credit-BCCI/IPL

5 /8

டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா (Kagiso Rabada) இந்த சீசனில் அதிரடியாக பந்து வீசினார், 17 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரபாடாவுக்கு பர்பில் கேப் பட்டமும் (Purple Cap title), 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கொடுக்கப்பட்டது. Photo Credit-BCCI/IPL

6 /8

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவதத்தா படிகல் (Devadatta Padikal) தனது ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த சீசனில் அவர் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், 15 போட்டிகளில் 5 அரைசதங்களும், மொத்தம் 473 ரன்கள் எடுத்தார். ஆர்.சி.பியின் வீரர், தனது அற்புதமான விளையாட்டுக்காக 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையைப் பெற்றார். அது மட்டுமல்ல, Emerging Player of the Tournament விருதையும் பெற்றார்.  Photo Credit-BCCI/IPL

7 /8

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டித் தொடரின் 14 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 10 லட்சம் ரூபாய் பரிசை வென்ற ஆர்ச்சர், 305 MVP புள்ளிகளைப் பெற்றார். Photo Credit-BCCI/IPL

8 /8