ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தை தலிபான்கள் அறிவித்தனர். முல்லா ஹசன் அகுந்த் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
போர் மூலம் நாட்டைப் பிடித்த தாலிபான்களின் புதிய அமைச்சர்களின் கல்வித் தகுதி என்ன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமில்லை. ஏனென்றால், கடும்போக்கு மத குருமார்களும், பயங்கரவாதிகளும் தான் இனி ஆப்கானிஸ்தானின் அமைச்சர்கள்! வித்தியாசமான இந்த அமைச்சரவையின் சில அமைச்சர்கள்…
தலிபானின் சக்திவாய்ந்த முடிவெடுக்கும் அமைப்பான ரெஹ்பரி ஷுரா அல்லது தலைமைத்துவ கவுன்சிலின் நீண்டகால தலைவர் அகுந்த். 1996-2001 வரை தலிபான்களின் ஆட்சியின் போது அவர் வெளியுறவு அமைச்சராகவும் பின்னர் துணை பிரதமராகவும் பதவி வகித்தார் முகமத் ஹசன் அகுந்த். தலிபான் இயக்கத்தின் முதல் தலைவர் முல்லா முகமது உமருக்கு நெருக்கமான கூட்டாளி மற்றும் அரசியல் ஆலோசகர் இவர்.
பரதர் ஒரு காலத்தில் முல்லா உமரின் நெருங்கிய நண்பராக இருந்தார், அவர் அவருக்கு "பரதர்" அல்லது "சகோதரர்" என்று பெயரிட்டார். தலிபான்கள் கடைசியாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது துணை பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார் அப்துல் கனி பரதர்.
முந்தைய தலிபான் அரசாங்கத்தின் போது கலாச்சாரம் மற்றும் தகவல் அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய AMIR KHAN MUTTAQI அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய சமாதான ஆணையம் மற்றும் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினராக இருந்தவர்.
செல்வாக்கு மிக்க ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவரான சிராஜுதீன் ஹக்கானி, அவரது தந்தை ஜலாலுதீன் ஹக்கானி 2018 இல் இறந்ததைத் தொடர்ந்து அதன் தலைவராக இருக்கிறார். இவர் இனி ஆப்கனின் உள்துறை அமைச்சர்.
தலிபானின் நீண்டகால செய்தித் தொடர்பாளர், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக குழுவின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை அளித்து வருகிறார் முஜாஹித் தொடர்ந்து தனது ட்விட்டர் கணக்கு மூலம் தற்கொலை தாக்குதல்களின் விவரங்களை வெளியிட்டு வரும் இவர் தான், ஆப்கனின் தகவல்துறை அமைச்சர். (Photos and text: Reuters)
தாலிபானின் நிறுவனர் முல்லா உமரின் மகன், யாகூப், தற்போது ஆப்கனின் பாதுகாப்பு அமைச்சர்.