சமந்தாவின் ரிப்போர்ட் கார்ட்! ரொம்ப படிக்கிற பொண்ணு போல..வைரல் போட்டோ!

Actress Samantha 10th Standard Report Card : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா, 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? 

Actress Samantha 10th Standard Report Card : தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பிரபலமாகியிருப்பவர், சமந்தா. இவர், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் சென்னையில் இருக்கும் பல்லாவரத்தில்தான் படித்து வளர்ந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த ஆண்டு குஷி படத்தில் நடித்திருந்த அவர், சில மாதங்கள் பிரேக் எடுத்த பிறகு மீண்டும் திரையுகிற்குள் கம்-பேக் கொடுக்க இருக்கிறார். இந்த நிலையில், இவரது 10ஆம் வகுப்பு ரிப்போர்ட் கார்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

தமிழில், மாஸ்கோவின் காவிரி படம் மூலம் அறிமுகமாகி விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மூலம் பிரபலமானவர் சமந்தா.

2 /8

மிக இளம் வயதிலேயே திரையுலகிற்குள் நுழைந்த இவர், தமிழில் இருக்கும் டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் உருவான பல படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன. 

3 /8

சமந்தா, நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 

4 /8

விவாகரத்திற்கு பிறகு, பழைய சமந்தாவை பார்க்க முடியவில்லை என அவரது ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வந்தனர். போதாக்குறைக்கு, சமந்தா பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கும் ஆளானார். 

5 /8

சமந்தாவிற்கு, மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த இவர், பின்னர் சில படங்களின் ஷூட்டிங்கிள் கலந்து கொண்டார். 

6 /8

சமந்தாவின் சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அவர் சில மாதங்கள் திரையுலகில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். 

7 /8

சிட்டெடல் தொடரில் நடித்திருக்கும் சமந்தா, தனது நீண்ட பிரேக்கிற்கு பிறகு அந்த தொடரின் ப்ரமோஷன் விழாக்களில் கலந்து கொண்டார். இவர் விரைவில் திரையுலகிற்குள் ரீ-எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

8 /8

சமந்தாவின் 10ஆம் வகுப்பு மார்க்‌ஷீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1000த்திற்கு 887 மதிப்பெண்கள் எடுத்திருக்கும் சமந்தாவை பார்த்து, பலர் “இவர் படிக்கிற பொண்ணு போல” என்று கூறி வருகின்றனர். ஆனால், சில பாடங்களில் இவருக்கு 50க்கு 87 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்த ரிப்போர்ட் கார்ட் உண்மைதானா என்பது தெரியவில்லை.