Madonna Sebastian : கடற்கரையில் கடல்கண்ணியாக மடோனா செபாஸ்டியன்! வைரல் போட்டோக்கள்..

Madonna Sebastian Viral Photos :  மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் மடோனா சபாஸ்டியன், கடற்கரை ஓரம் போட்டோ ஷூட் செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

Madonna Sebastian Viral Photos : தமிழில் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்து அறிமுகமானவர் மடோனா சபாஸ்டியன். மலையாளத்திலும் பிரபலமாக வலம் வரும் இவர், கடைசியாக தமிழில் ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார். இவர், தற்போது கடற்கரையில் இவர் எடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1 /8

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து தென்னந்திய திரையுலகில் பிரபலமாக வலம் வருபவர் மடோனா செபாஸ்டியன்.

2 /8

மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தில் நடித்து அறிமுகமான மடோனா செபாஸ்டியன், அடுத்து நடிக்க வந்ததே தமிழ் திரையுலகிற்குதான். 

3 /8

தமிழில், ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் யாழினியாக நடித்திருந்த இவர் அதன் மூலம் பல இளைஞர்களுக்கு ஃபேவரட் கதாநாயகியாக மாறினார். 

4 /8

மடோனா செபாஸ்டியனுக்கு படத்தில் நடிப்பது மட்டுமல்ல பாடல்கள் பாடுவதிலும் நாட்டம் உள்ளது.

5 /8

மடோனா, ஒரு சில மேடை நிகழ்ச்சிகளில் பாடல் பாடியிருக்கும் இவர், விருது நிகழ்ச்சி ஒன்றில் பாடி சமீபத்தில் வைரலானார். 

6 /8

மடோனா, கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். இவரது கேரக்டர் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் இது பெரிய கேமியோவாக பார்க்கப்பட்டது. 

7 /8

மடோனா, அடிக்கடி போட்டோ ஷூட் செய்யும் பழக்கம் உள்ளவர். இவர், தற்போது புதிதாக சில போட்டோக்களை பதிவிட்டிருக்கிறார். 

8 /8

கடற்கரைக்கு அருகே அமர்ந்து இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.