7th Pay Commission: இந்த பகுதி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டி.ஏ., டி.ஆர் சலுகைகளின் முடக்கம் விரைவில் நீக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு வரிசையாக இன்னும் பல சலுகைகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது. இந்த வரிசையில், ஒரு குறிப்பிட்ட பிரிவு அதிகாரிகளுக்கு அரசாங்கம் 'பண ஊக்கத்தொகையை' (monetary incentives) அறிவித்துள்ளது. 

இந்த சிறப்பு கொடுப்பனவு (பண ஊக்கத்தொகை) அகில இந்திய சேவைகளின் வடகிழக்கு பிராந்திய பணியாளர் குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் முதற்கொண்டு லடாக் யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் அகில இந்திய சேவை (AIS) அதிகாரிகள் வரை அனைவருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 /5

"லடாக் யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு கூடுதல் நிதி ஊக்கத்தொகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது உச்சவரம்புக்கும், அவ்வப்போது இது தொடர்பாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கும் உட்பட்டது" என்று அரசாங்கத்தின் தரப்பில் செயலாளர் தேவேந்திர குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதம் அனைத்து மாநில அரசாங்கங்களின் தலைமை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டது.

2 /5

இப்போது, ​​லடாக் யூனியன் பிரதேசத்தில் பணியமர்த்தப்பட்ட  AIS அதிகாரிகளுக்கு, அவர்களது அடிப்படை சம்பளத்தில், 20 சதவீத கூடுதல் சிறப்பு சலுகையும் 10 சதவீத சிறப்பு பணி கொடுப்பனவும் வழங்கப்படும்.

3 /5

முன்னதாக, நரேந்திர மோடி அரசு ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் முழு பலன்களைப் பெறுவார்கள் என்று அறிவித்திருந்தது.

4 /5

கடந்த ஆண்டு கோவிட் 19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை முடக்குவதற்கு அரசாங்கம் முடிவெடுத்ததையடுத்து, தற்போது அவர்கள் 17 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். தற்போது அரசாங்கம் எடுத்துள்ள முடிவால், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடும் அகவிலைப்படி தற்போது 28% (17% + 11%) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

5 /5

"01.07.2021 முதல் வரவேண்டிய அகவிலைப்படியின் எதிர்கால தவணைகளை வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்படும் போது, ​​01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படி வீதம், மீட்டமைக்கப்படு 01.07.2021 முதல் அமல்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த திருத்தப்பட்ட விகிதங்களில் சேர்க்கப்படும்" என்று நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னதாக மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.