25 Years Of Padayappa : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம், தற்போது 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையடுத்து, இப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
25 Years Of Padayappa : கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம், ‘படையப்பா’. இந்த படத்தில், சிவாஜி கணேசன், செந்தில், கிருஷ்ண மூர்த்தி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் அனைவரும் இருந்தாலும், படத்தை இரண்டு காரணங்களுக்காக மட்டுமே ரசிகர்கள் வந்து தியேட்டர்களில் பார்த்தனர். ஒரு காரணம் படையப்பாவாக நடித்த ரஜினி என்றால், இன்னொரு காரணம் படத்தின் வில்லி நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன். இவர், இந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து நடித்தார் என்பது நமக்கு தெரியும். ஆனால், இதில் முதலில் நடிக்க தேர்வான இரண்டு நடிகைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?
படையப்பா படத்தில், விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு பஞ்ச் வசனங்கள் இருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட ரஜினிகாந்தின் படங்களுள் முக்கிய இடத்தை பெற்றது படையப்பா.
விமான விபத்தில் உயிரிழந்த நடிகை சௌந்தர்யா, இதில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்த்ரா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க சிம்ரனை அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் இதில் நடிக்க முடியாமல் போனதாக திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.
படத்தின் முதல் பாதியில் இளமை தோற்றத்திலும், இரண்டாம் பாதியில் கம்பீரமான வயதானவர் தோற்றத்திலும் நடித்திருப்பார் ரஜினிகாந்த்.
படையப்பா படத்தில், ரஜினிகாந்திற்கு இணையாக பேசப்பட்ட இன்னொரு கதாப்பாத்திரம் நீலாம்பரி. இந்த கதாப்பாத்திரத்தில் நடித்தவர், ரம்யா கிருஷ்ணன்.
ரம்யா கிருஷ்ணனின் திமிரான பார்வையும், வசன உச்சரிப்பும், ஆக்ரோஷமான நடிப்பும் இன்றும் படையப்பா படத்தை பார்க்கும் போதெல்லாம் மயிர்கூச்சரிய செய்யும்.
ரம்யா கிருஷ்ணனுக்கு முன்னதாக இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நக்மாவையும், மீனாவையும் அழைத்தாராம் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். ஆனால், நக்மா வேறு ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டதால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். நடிகை மீனா, தானும் ரஜினியும் ஜோடியாக நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்றும், ரஜினிக்கு எதிராக நெகடிவ் ரோலில் நடித்தால் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினாராம். இதையடுத்துதான் ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரியாக நடிக்க வைத்துள்ளனர்.