விஜய் படத்தின் இசையமைப்பாளராக சிம்பு? வைரல்!!

Last Updated : Mar 27, 2017, 01:29 PM IST
விஜய் படத்தின் இசையமைப்பாளராக சிம்பு? வைரல்!! title=

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்துக்கு சிம்பு இசையமைக்க இருப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்  இப்படத்தைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். 

இப்படம் குறித்த தகவல் வெளியான நேரத்தில், இதற்கு சிம்பு இசையமைக்கவுள்ளதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியானது. 

இது தொடர்பாக படக்குழுவை விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது:- 

படமே தற்போது தான் உறுதியாகியுள்ளது. மகேஷ்பாபு படத்தை முடித்தவுடன் தான் முழுமையாக விஜய் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். அதற்குள் சிம்பு இசையமைப்பாளர் என்று எப்படி தகவல் வெளியானது என்று தெரியவில்லை. இசையமைப்பாளர் குறித்து படக்குழு இன்னும் யாரையுமே தொடர்பு கொள்ளவில்லை" என்று கூறினார்கள்.

 

Trending News