ட்விட்டரில் ட்ரண்ட் ஆகும் #Thalapathy62 - ஏன்?

மெர்சல் படத்திற்கு பின் மீண்டும் விஜய் பெயரினை ட்ரண்டில் கொண்டுவந்து விட்டனர் விஜய் ரசிகர்கள். தற்போத ட்ரண்டில் நிற்கும் ஆஸ்டேக் #Thalapathy62 மற்றும் #Vijay62 தான்!

Last Updated : Dec 5, 2017, 07:14 PM IST
ட்விட்டரில் ட்ரண்ட் ஆகும் #Thalapathy62 - ஏன்? title=

மெர்சல் படத்திற்கு பின் மீண்டும் விஜய் பெயரினை ட்ரண்டில் கொண்டுவந்து விட்டனர் விஜய் ரசிகர்கள். தற்போத ட்ரண்டில் நிற்கும் ஆஸ்டேக் #Thalapathy62 மற்றும் #Vijay62 தான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் தான் Vijay62. 

திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில். தற்போது இப்படத்தினை குறித்த தகவல்கள் சில கசிந்துள்ளதால் ட்விட்டரில் ட்ரண்ட் ஆகி வருகிறது.

வரும் ஜனவரியில் இப்படத்தின் படபிடிப்பு தொடங்கும் எனவும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் எடிட்டராக எட்டு முறை தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் பணி புரிய இருப்பதாகவும், ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தெரிகிறது!

Trending News