ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டாப் சைக்கோ த்ரில்லர் படங்களின் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சைக்கோ த்ரில்லர் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என படங்கள் வந்தாலும் ரசிகர்கள் பலர் சைக்கோ த்ரில்லர் கதை அம்சம் கொண்ட படங்களை விரும்புகின்றனர்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 10, 2023, 04:07 PM IST
  • ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சைக்கோ த்ரில்லர் திரைப்படங்கள்.
  • சிவப்பு ரோஜாக்கள் முதல் ராட்சசன் வரை.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டாப் சைக்கோ த்ரில்லர் படங்களின் லிஸ்ட் title=

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சைக்கோ த்ரில்லர் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என படங்கள் வந்தாலும் ரசிகர்கள் பலர் சைக்கோ த்ரில்லர் கதை அம்சம் கொண்ட படங்களை விரும்புகின்றனர். சைக்கோ த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்கள் பெரும்பாலும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டே இயக்குநர்கள் படத்தை இயக்குகின்றனர். இந்த வகையில் தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சைக்கோ த்ரில்லர் திரைப்படங்கள் எவை எவை என்பதை இந்த பதிவில் காண்போம். 

மன்மதன்
மன்மதன் படத்தின் மூலம் சிம்பு முதல் முறையாக டூயல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தில் ஜோதிகா, சந்தானம், கவுண்டமணி மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்துள்ளனர். இளைஞர்கள் பலரின் ஃபேவரைட் படமாக அமைந்தது.

காதல் கொண்டேன்
காதல் கொண்டேன் 2003 ஆம் ஆண்டு வெளியானது. தனுஷ் இப்படத்தின் கதாநாயகன் ஆவார். சோனியா அகர்வால் இப்படத்தின் கதாநாயகி ஆவார். இதை இயக்கியவர் செல்வராகவன். தனுஷிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது. நன்கு நடிக்க கூடியவர் என்ற பெயரைப் பெற்று தந்தது.

மேலும் படிக்க | ஜோடியாக அறிமுகமாகும் அமீர் - பாவ்னி! இயக்குனர் யார் தெரியுமா?

வாலி
வாலி 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படமாகும். படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்ரனும், ஜோதிகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்குமார் நாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடமேற்றுள்ளார்.

ஆளவந்தான்
இயக்குநர் சுரேஷ் கிஸ்னா இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியான சீரியல் கில்லர் திரைப்படம் "ஆளவந்தான்". இப்படத்தில் கமல் டூயல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 'தாயம்' என்ற த்ரில்லர் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. கமலின் மூன்றாவது சைக்கோ படமாக ஆளவந்தான் அமைந்தது.

அந்நியன்
அந்நியன் 2005 சங்கரின் தயாரிப்பில் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். நடிகர் விக்ரம், விவேக், நடிகை சதா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இப்படம் மிக பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. சமுதாயத்தில் ஏற்படும் சில பிரச்னையால் விக்ரம் மனம் ரீதியாக பாதிக்கப்பட்டு ஒரு சைக்கோவை போல் நடந்துகொள்ளும் கதையாக ஷங்கர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

சிவப்பு ரோஜாக்கள்
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இத்திரைப்படம் ஒரு மனநோயாளியான பெண்-வெறுப்பாளர், பெண்களைக் கையாண்டு தன்னைத் திருமணம் செய்து கொள்வதையும், பின்னர் அவர்களைக் கொன்று தனது தோட்டத்தில் புதைப்பதையும் பற்றியது. கமல்ஹாசனின் உண்மை நிலையை அறிந்து ஸ்ரீதேவி வீட்டை விட்டு வெளியேற முயலும் காட்சி பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்துச் செல்லும்.

இமைக்கா நொடிகள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் "இமைக்கா நொடிகள்". பல திருப்புமுனை கொண்ட த்ரில்லர் படமாக இப்படம் அமைந்தது. நயன்தாரா இப்படத்தில் தனது நடிப்பினால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

ஸ்பைடர்
இயக்குநர் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'ஸ்பைடர்'. இப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் சைக்கோ படமாக எடுக்கப்பட்டது. தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்தபடாம ஸ்பைடர் அமைந்தது.

ராட்சசன்
இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான சீரியல் கில்லர் த்ரில்லர் திரைப்படம் "ராட்சசன்". இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அமலா பால் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஒரு சைக்கோ ஆண் பல இளம் பெண்களை மட்டுமே குறிவைத்து கொலை செய்யும் சீரியல் கில்லர் கதையாக எடுக்கப்பட்டது.

சைக்கோ
மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் "சைக்கோ". நடிகர் உதயநிதி இப்படத்தில் பார்வையற்றவராக நடித்து அசத்தியிருப்பார்.

மேலும் படிக்க | விடுதலை பார்ட் 2-க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்! வெளியாவதில் சந்தேகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News