'தனி ஒருவன் 2' : பிப்ரவரி 2021 முதல் ஷூட்டிங் தொடங்கம்....யார் யார் நடிக்கப்போவது?

'தனி ஒருவன் 2' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Sep 30, 2020, 04:26 PM IST
    1. 'தனி ஒருவன் 2' (Thani Oruvan 2) படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    2. மோகன் ராஜா, ஜெயம் ரவியுடன் 'தனி ஓருவன் 2' படத்திற்காக கைகோடுவதாக அறிவித்துள்ளார்.
    3. இப்படத்தின் ஷூட்டிங் 2021 பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'தனி ஒருவன் 2' : பிப்ரவரி 2021 முதல் ஷூட்டிங் தொடங்கம்....யார் யார்  நடிக்கப்போவது? title=

'தனி ஒருவன் 2' (Thani Oruvan 2) படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மோகன் ராஜா (Mohan Raja) இயக்கிய 'தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவி (Jayam Ravi), அரவிந்த் சுவாமி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் துடிப்பான ரோலில் நயன்தாரா என அக்மராக் கமெர்ஷியல் மற்றும் மெஸேஜ் இரண்டும் கலந்த படம். இந்த படம் பெரும் அசத்தலான வெற்றியை தந்தது. 

தற்போது, மோகன் ராஜா, ஜெயம் ரவியுடன் 'தனி ஒருவன் 2' படத்திற்காக கைகோடுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனி ஒருவன் இரண்டாம் பாகம் ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வருவதாக மோகன் ராஜா தகவலை பகிர்ந்தார். முதல் பாகத்தை விட பல மடங்கு திரில்லராக இந்த பார்ட் உருவாகுமாம்.

 

ALSO READ | OTT மேடையில் வெளியிடப்படுமா ஜெயம் ரவியின் பூமி?

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் 2021 பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லன் வேடத்தில் அரவிந்த் சாமி கிடையாது. மற்றபடி முதல் பார்ட்டில் உள்ள பலரும் இதிலும் இருப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையில், தற்போது மணிரத்னத்துடன் இணைந்து 'பொன்னியன் செல்வன்' (Ponniyin Selvan) என்ற காவிய வரலாற்று படத்திற்காக பணிபுரிந்து வரும் ஜெயம் ரவி, படத்தில் தனது பாத்திரத்திற்காக முடி வளர்ந்ததால் பிப்ரவரி மாதத்திற்குள் தனது படங்களின் படப்பிடிப்பை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தனி ஒருவன்' படத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்தார், இதன் தொடர்ச்சியின் கதை அதன் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ALSO READ | ரஜினியை விமர்சித்தது ஏன், கோமாளி பட இயக்குநர் விளக்கம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News