PS-2: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கைகோர்த்த ரெட் ஜயண்ட் மூவிஸ்

PS-2 Tamil Nadu theatrical distribution: உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜயண்ட் மூவிஸ் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜாண்ட் மூவிஸ் என இரு தரப்பும் உறுதி செய்துள்ளன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 27, 2023, 05:02 PM IST
  • பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உதயநிதி ஸ்டாலின்?
  • நாளை மறுநாள் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா
  • லைகாவுடன் கைகோர்க்கும் உதயநிதி
PS-2: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கைகோர்த்த ரெட் ஜயண்ட் மூவிஸ் title=

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் இயக்குனர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் இன்னும் சில நாட்களில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகவிருக்கிறது.

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் நீண்ட நாள் கனவு திட்டமான கல்கியின் மிகவும் பிரபலமான நாவலை அற்புதமாக கையாண்டுள்ளார் என்பதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று நிரூபித்தது.

தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் பொன்னியின் செல்வன் படமும் ஒன்றாக மாறியிருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த பொன்னியின் செல்வன், மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தின் பின்னணியில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க | ஏப்ரல் மாதத்தில் சித்திரை வெயிலுடன் இணைந்து வாட்டி வதைக்கவிருக்கும் சனீஸ்வரர்

நடிக நடிகையரின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்படிருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, அஷ்வின், ரஹ்மான், ஜெயராம் உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இன்னும் இரண்டு நாட்களில் உலக நாயகன் கமலஹாசன் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா மார்ச் 29ம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

மேலும் படிக்க | சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News