ஜுலான் கோஸ்வாமியின் (Jhulan Goswami) வாழ்க்கை வரலாற்றுப் படமான 'சக்தா எக்ஸ்பிரஸ்' (Chakda Xpress) படத்திற்கான அனுஷ்கா ஷர்மாவின் தோற்றம் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலான் கோஸ்வாமியாக அனுஷ்கா ஷர்மா ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்துள்ளார். உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமான பெண் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜுலான், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக பெண் வெறுப்பு அரசியல் மற்றும் எண்ணற்ற தடைகளை மீறி எப்படி வெற்றி பெற்றார் என்ற அற்புதமான பயணத்தை இந்த திரைப்படம் விவரிக்கிறது.
அனுஷ்கா மற்றும் அவரது சகோதரர் கர்ணேஷ் ஷர்மாவின் க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ப்ரோசித் ராய் இயக்கிய “சக்தா எக்ஸ்பிரஸ்” திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் (Netflix) வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அனுஷ்காவை திரையில் பார்ப்பதால் அவரது பல ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இருந்தாலும், ஜுலான் வேடத்தில் பெங்காலி நடிகரை நடிக்க வைக்காதது மற்றும் அனுஷ்காவின் பெங்காலி மொழி உச்சரிப்பு போன்ற காரணங்களுக்காக படத்தை பலர் விமர்சித்து வருகின்றனர்.
Offline classes Online classes
Online Exams Offline Exams#AnushkaSharma #ChakdaXpress pic.twitter.com/JWhpOACdGm
— Abhishek Tripathi (@abhithecomic) January 6, 2022
When some Kohli fan say that #AnushkaSharma has nailed the role and look of Jhulan Goswami .
Then everyone :- pic.twitter.com/XppEEx2iEf
— Paapsee Tannu 2.0 ( TAX CHOR ) (@tiranga__1) January 6, 2022
I'm happy coz a biopic on Jhulan Goswami is coming. I'm also happy for Anushka coming back but this trailer is disappointing. What's wrong with the accent!!
You could have easily cast a Bengali actor man!! https://t.co/k6Uuv5jc68— Ananya (@LoungingBanjara) January 6, 2022
why didn't they cast a bengali actress instead ? there are so many talented bengali actresses...the accent is so so bad even anushka's good acting isnt saving because of her bad bengali accent https://t.co/mJlQEWJNK6
— ayushi (@_DevAkshi__) January 6, 2022
டீசர் வெளியானதை தொடர்ந்து அனுஷ்கா ஷர்மா இப்படம் மற்றும் ஜூலனின் வாழ்க்கை பற்றி பேசினார். “இது மிகவும் சிறப்பு வாய்ந்த படம், ஏனெனில் இது அடிப்படையில் மிகப்பெரிய தியாகத்தின் கதை. சக்தா எக்ஸ்பிரஸ், முன்னாள் இந்திய கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை மற்றும் அவரது தியாகத்தால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்டது. இது பெண்கள் கிரிக்கெட் உலகில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். ஜூலன் ஒரு கிரிக்கெட் வீரராகவும், உலக அரங்கில் தனது நாட்டை பெருமைப்படுத்தவும் முடிவு செய்த அந்த காலகட்டத்தில், பெண்கள் விளையாடுவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த திரைப்படம் அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு மற்றும் பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் வகையிலும் உருவாக்க பட்டு உள்ளது" என்று கூறினார்.
ALSO READ | கோடிகளை கொட்டி எடுக்கப்பட்ட ’அகண்டா’ சண்டைக்காட்சி..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR