கலகலப்பான காதல்.. ஹரிஷ் கல்யாணின் 'எல்ஜிஎம்' டீசர் வெளியானது

LGM Movie Teaser:  தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரித்து வரும் முதல் படமான எல்ஜிஎம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 8, 2023, 07:12 AM IST
  • எல்ஜிஎம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
  • விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகும்.
  • ஹரிஷ் கல்யாணின் நண்பனாக நடித்துள்ள ஆர்ஜே விஜய்யும் அட்டகாசம்.
கலகலப்பான காதல்.. ஹரிஷ் கல்யாணின் 'எல்ஜிஎம்' டீசர் வெளியானது title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்ஜிஎம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்  தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

லெட்ஸ் கெட் மேரீட் (LGM) படம் , முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. 'எல்ஜிஎம்' படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த டீசர் அமைந்துள்ளது. இந்த டீசர் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த டீசரை பார்க்கும் போது, சின்ன சின்ன கட்களாக காமெடி தூக்கலாக உருவாகி உள்ளது போல் தெரிகிறது. டீசரை பொறுத்தவரையில் இளைஞர்களை டார்கெட் செய்து படம் உருவாகி உள்ளது. ஆனால், ரொம்ப கேட்சியாக எந்தவொரு காட்சியும் இல்லை என்பது போலத் தோன்றுகிறது. இதனால் இந்த படம் ஹிட் அடிக்குமா? அல்லது சுமாராக இருக்குமா என்பது திரைக்கதை பார்த்தால் தெளிவாகத் தெரியும்.

மேலும் படிக்க | புஷ்பா செய்த சதியால் சக்திக்கு அதிர்ச்சி..மீனாட்சி பொண்ணுங்க தொடரில் இத்தனை ட்விஸ்டா!

லெட்ஸ் கெட் மேரீட் (எல்ஜிஎம்) படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். அத்துடன் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு மற்றும் மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் விடிவி கணேஷும் இந்த படத்தில் காமெடி கலாட்ட செய்ய காத்திருக்கின்றனர் என்பது தற்போது வெளியான டீசரிலேயே தெளிவாக தெரிகிறது. மேலும் இப்படத்திற்கு இவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 

அண்மையில் தான் எல்.ஜி.எம். படக்குழு படப்பிடிப்பை முடித்து அதற்கான கொண்டாட்டத்தையும் மேற்கொண்டது. மேலும்  இந்தப் படம் நிச்சயமாக ஒரு நல்ல சினிமா பார்த்ததற்கான அனுபவத்தைத் தரும். ரசிகர்கள் ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தையும், அதன் ஊடே உணர்வுப்பூர்வமான காட்சிகளையும், வயிறு குலுங்கவைக்கும் காமெடியையும் ஒருசேரக் காணலாம் என தயாரிப்பு தரப்பு தெரிவிக்கின்றது. இந்தப் படத்தை விகாஸ் ஹசிஜா தயாரிக்க பிரியான்ஷு சோப்ரா இதன் கிரியேடிவ் தயாரிப்பாளராக உள்ளார். 

இந்த நிலையில் ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. உங்களுக்காக டீசர் இதோ:

இதற்கிடையில் கூடிய விரைவில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘நண்பன்னாலே நல்லவன்தான்..’தளபதி முதல் நண்பன் வரை-நட்புணர்வை உலகிற்கு உணர்த்திய படங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

மேலும் படிக்க | ‘நண்பன்னாலே நல்லவன்தான்..’தளபதி முதல் நண்பன் வரை-நட்புணர்வை உலகிற்கு உணர்த்திய படங்கள்..! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள். முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ

Trending News