'பாகுபலி' படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அதிக வெற்றியை பெற்றது. ஒமிக்ரான் தொற்று காரணமாக ஆர்ஆர்ஆர் பட வெளியீட்டில் சிறிது தொய்வு ஏற்பட்டு பட வெளியீடு தள்ளிப்போனது. அந்த சமயத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது தந்தையும், இயக்குனருமான கே.விஜயேந்திர பிரசாத் இருவரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் தங்களது அடுத்த படத்திற்கான திட்டத்தை தொடங்க முற்பட்டனர்.
மேலும் படிக்க | தளபதி 66-ல் சரத்குமாரின் ரோல் என்ன? இதோ அப்டேட்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கப்போகும் செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்தது. மேலும் இப்படம் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது என்று சில தகவல்களும் வெளியாகியது. இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி பேட்டி ஒன்றில் உருவாகவுள்ள இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், இரண்டரை மாதங்களாக எந்த கதை மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தேன். மகேஷ் பாபுவிற்காக இரண்டு பரபரப்பான கதைக்களத்தை தயார் செய்துள்ளேன், அந்த இரண்டு கதையிலிருந்து விரைவில் ஒரு கதையை இறுதி செய்வேன், இந்த படம் மகேஷ் பாபுவின் ரசிகர்களுக்கு சிறந்த கொண்டாட்டமாக அமையும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், பிரபல சுவிஸ்-ஜெர்மன்-அமெரிக்க இயக்குனரும், தயாரிப்பாளருமான வில்லியம் வைலர் இயக்கத்தில் 1959-ம் ஆண்டு வெளியான 'பென் ஹர்' படத்தின் தீவிர ரசிகன் நான், அதுமட்டுமல்லாது அவரது படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் கவனத்தை ஈர்த்தது என்றும் கூறியுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கபோகும் படத்தின் பணிகள் இந்த ஆண்டிற்குள் தொடங்கப்படவுள்ளது, இதனை தயாரிப்பாளர் கே.எல்.நாராயணா தயாரிக்கிறார்.
மேலும் படிக்க | 'KGF-2' பட எடிட்டர் ஒரு சிறுவனா?! மிரண்டு பார்க்கும் திரையுலகம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR