"காதலிக்காதே" சிங்கிள் டிராக் saavn-னில் வெளியானது!!

Last Updated : Oct 4, 2017, 11:16 AM IST
"காதலிக்காதே" சிங்கிள் டிராக் saavn-னில் வெளியானது!! title=

அதர்வா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'இமைகா நொடிகள்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் இன்று வெளியாகி உள்ளது.

'டிமான்ட்டி காலனி' படத்தைத் தொடர்ந்து கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் அஜய் ஞானமுத்து. 

அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார். ஹிந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘காதலிக்காதே’ இன்று (அக்டோபர் 4) சாவன் ("saaavn") ஆப்பில் வெளியாகி உள்ளது.

 

பாடல் லிங்க்:- https://www.saavn.com/s/song/tamil/Imaikkaa-Nodigal/Kadhalikathey/HxwEXR...

Trending News