கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்..லிஸ்டில் யார் டாப் தெரியுமா?

தென்னிந்திய நடிகைகளில், அதிகம் சம்பளம் வாங்கும் நாயகிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் நமக்கு பிடித்த ஒரு நடிகை டாப்பில் உள்ளார். அவர் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 13, 2023, 03:03 PM IST
  • அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளின் பட்டியல்.
  • லிஸ்டில் கீர்த்தி, நயன்தாரா, ரகுல் ப்ரீத் சிங் போன்ற பலர் உள்ளனர்.
  • லிஸ்டில் யார் முதலில் உள்ளது தெரியுமா?
கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்..லிஸ்டில் யார் டாப் தெரியுமா? title=

தென்னிந்திய சினிமாவில் திறமைக்கும் திறமைமிகு கலைஞர்களுக்கும் பஞ்சமே இல்லை. நடிகர்களை மட்டும் கொண்டாடி வந்த தமிழ் திரையுலகம், தற்போது நடிகைகளுக்கும் தகுந்த அங்கீகாரத்தை கொடுத்து அவரவரவர்களுக்கு உரிய இடத்தில் அவர்களை அமர்த்தி வைத்துள்ளது. தென்னிந்திய நடிகைகளில் கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுபவர்களின் பட்டியல். 

பின்வரும் விவரங்கள் நம்பகமான தரவுகளை அளிக்கும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. இது தவறாக இருந்தால், ஜீ தமிழ் நிர்வாகம் பொருப்பேற்காது. 

12.கீர்த்தி சுரேஷ்:

மாமன்னன் நாயகி கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக வலம் வருகிறார். நடிகையர் திலகம், சாணி காயிதம் போன்ற படங்களின் மூலம் தனக்குள் இருக்கும் நடிப்பின் அரசியை வெளிகொண்டு வந்தவர் இவர். இருப்பினும், திரைக்கதை சரியில்லாத படங்களை தேர்ந்தெடுத்து சொதப்பி விடுகிறார். இவர், 2 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

11. ஸ்ருதி ஹாசன்:

கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், தமிழ் படங்களில் நடித்தே பல நாட்கள் ஆகிவிட்டது. கடைசியாக, தெலுங்கில் வெளியான வீர சிம்மா ரெட்டி படத்தில் நடித்திருந்தார். நாயகியாகவும் பாடகியாகவும் வலம் வரும் இவர், ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 2 கோடி. 

10. காஜல் அகர்வால்:

சமீபத்தில் தாயான அழகு நடிகை, காஜல். கார்த்தி, சூர்யா, விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து விட்டார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இவரது சம்பளம், ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாயாம். 

9.ராஷ்மிகா மந்தனா:

புஷ்பா பட நாயகி ராஷ்மிகா, கீதா கோவிந்தம் படத்தில் நடித்தது முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். திரையுலகிற்கு வந்த சில நாட்களிலேயே, தெலுங்கு மற்றும் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். இவர், தற்போது 3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சிறுவயதிலேயே சினிமா-இசைப்புயலின் உறவினர்..ஜி.வி.பிரகாஷ் குறித்த அறியாத தகவல்கள் இதோ..!

8.தமன்னா:

10 வருடங்களுக்கும் மேலாக, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகி எனும் பட்டத்தை பெற்றுள்ளவர் தமன்னா. இந்தி பேசுபவராக இருந்தாலும் சமீபத்தில்தான் பாலிவுட் இவருக்கு வளர வழிவிட்டது. தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர், ஒரு படத்திற்கு 3 கோடி சம்பளம் வாங்குவதாக பேசப்படுகிறது. 

7.ரகுல் ப்ரீத் சிங்:

இந்தியன் 2 பட நாயகி ரகுல் ப்ரீத் சிங், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் கோலோச்சி வருகிறார். மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். இதனால் இவருக்கு மார்கெட் கொஞ்சம் தூக்கல். ஒரு படத்திற்கு இவர், 3.5கோடி வாங்குகிறாராம். 

6. சமந்தா:

சாகுந்தலம் நாயகி சமந்தா, கோலிவுட், டோலிவுட்டில் இருந்து இப்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார். சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் சமந்தா. இவருக்கு இந்தி சினிமா கதவும் திறந்துவிட, தென்னிந்திய இயக்குநர்களுக்கு தேவைப்படும் நாயகிகளின் டாப் லிஸ்டிற்கு சென்று விட்டார். இவரது சம்பளம் ஒரு படத்திற்கு மட்டும் 3.5கோடியாம். 

5.அனுஷ்கா ஷெட்டி:

‘இஞ்சி இடுப்பழகி’அனுஷ்கா அந்த படத்திற்கு பிறகு சொர்ப படங்களிலேயே நடித்து வருகிறார். தமிழில் விஜய், மாதவன், ஆர்யா என பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். இவர் குறைவான படங்களிலேயே நடித்து வந்தாலும் இவருக்கான மார்கெட் எப்போதுமே உண்டு. ஒரு படத்தில் நடிக்க இவர் வாங்கும் சம்பளம், 4 கோடியாம். 

4.பூஜா ஹெக்டே:

தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. கோலிவுட் அவருக்கு கைக்கொடுக்காமல் போக, பாலிவுட்டிற்கு சென்றார். அங்கே, ரசிகர்கள் இவருக்கு பலத்த வரவேற்பு கொடுக்க, பூஜாவின் மார்கெட்டும் உச்சத்திற்கு சென்றது. கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். பூஜாவின் சம்பளம், ஒரு படத்திற்கு 5 கோடியாம். 

3. ஸ்ரீநிதி ஷெட்டி:

ஸ்ரீநிதி ஷெட்டியை கே,ஜி.எஃப் படம் வெளிவரும் வரை பெரிதாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த படம் வெளிவந்து பான் இந்தியா அளவில் பெரிய ஹிட் ஆக, இவரது மவுசும் உயர்ந்தது, இவர், தற்போது ஒரு படத்திர்கு 7 கோடி சம்பளம் வாங்குகிறாராம், 

2. நயன்தாரா:

நம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மலையாள தொலைக்காட்சியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து தனக்கான இடத்தை தரமாக தக்க வைத்துள்ளார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக, கோலிவுட் ரசிகர்களுக்கு ஃபேவரட் ஹீரோயினாக வலம் வருகிறார், நயன். இவரை சிறப்பிக்கும் விதமாக “லேடி சூப்பர்ஸ்டார்” எனும் பட்டத்தை ரசிகர்கள் இவருக்கு அன்போடு கொடுத்துள்ளனர். நயன், ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். 

1.த்ரிஷா:

சமீப காலமாக, தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களால் அதிகம் தேடப்படும் நாயகியாக உள்ளார், த்ரிஷா. இவருக்கென்று ரசிகர் கூட்டம் என்ன, பெரிய ஆர்மியே உள்ளது. தற்போது லியோ படத்தில் விஜய்யுடன் பல வருடங்கள் கழித்து நடித்து வருகிறார். அடுத்து, விடா முயற்சி படத்திலும் தனுஷின் 50 ஆவது படத்திலும் இவர்தான் நாயகி என்ற தகவலும் உள்ளது. த்ரிஷா, ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 10 கோடி என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கமலின் 10 கேரக்டர்கள்-விஷ்ணுவின் 10 அவதாரங்கள்..’தசாவதாரம்’ படத்தில் ஒளிந்துள்ள ரகசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News