வடிவேலு பாடியுள்ள மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள்: இந்த தேதியில் வெளியீடு

Maamannan First single: வரும் 19 ம் தேதி மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். நடிகர் வடிவேலுவின் பின்னணி குரலில் இந்தப் பாடல் வெளியாக உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 17, 2023, 11:44 AM IST
  • வருகிற மே 19 ம் தேதி மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள்.
  • இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
  • இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
 வடிவேலு பாடியுள்ள மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள்: இந்த தேதியில் வெளியீடு title=

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் 'மாமன்னன்'. ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், வடிவேலு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர் ஒன்றில் வடிவேலு அரசியல்வாதி போல வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுகொண்டு நிற்க, அவருக்கு எதிர்முனையில் உதயநிதி ஸ்டாலின் கோட் சூட் மாட்டிக்கொண்டு கெத்தாக நிற்பது போன்று இருந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து கையில் துப்பாக்கியுடன் ஆக்கிரோஷமாக வடிவேலு அமர்ந்து இருக்க, அவருக்கு அருகில் கையில் கத்தியுடன் உதயநிதி ஆக்கிரஷோமாக அமர்ந்து இருக்கும் போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

'மாமன்னன்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது. மேலும் 'மாமன்னன்' படத்தை ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. அத்துடன் இந்த படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் ஜூன்-1ம் தேதியன்று சென்னையில் நடத்த படத்தின் தயாரிப்பு குழு திட்டமிட்டு இருக்கிறது. 'மாமன்னன்' படத்தின் பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கூடிய விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பினை பட தயாரிப்புக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஹார்மோன் ஊசி போட்டாரா ஹன்சிகா... மௌனத்தை கலைத்த அவரின் தாயார்!

இந்த நிலையில் தற்போது வருகிற மே 19 ம் தேதி மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற சோனி மியூசிக் சவுத் நிறுவனமும், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் அதிகாரப்பூர்வமாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு அறிவித்துள்ளனர். அத்துடன் இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தாலும், தான் முன்னர் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை தயாரித்து இருக்கிறார், அதன்பின்னர் கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கி குறுகிய காலத்தில் பிரபலமான தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உயர்ந்து இருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' எனும் நகைச்சுவை கலந்த காதல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இதையடுத்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், நிமிர், சைக்கோ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Thalaivar 170: கெட்டவன் vs கெட்டவன் - ரஜினிக்கு வில்லானாகும் சீயான் விக்ரம்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News