நாளை தனுஷின் “வடசென்னை” படத்தின் ஃபஸ்ட் லுக்!!

நடிகர் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தின் புதிய அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

Last Updated : Mar 7, 2018, 08:24 PM IST
நாளை தனுஷின் “வடசென்னை” படத்தின் ஃபஸ்ட் லுக்!! title=

நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வடசென்னை படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ராம், இயக்குனர் அமீர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிசோர், கருணாஸ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

மூன்று பாகமாக உருவாகவுள்ள இந்த படத்தின் முதற் பகுதி தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

மூன்று வருடமாக உருவாகி வரும் வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ், காசிமேட்டில் வசிக்கும் பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்த அனைவருக்குமே இந்தப் படம் பேர் சொல்லும் விதமாக இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (மார்ச் 8) வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. 

 

 

Trending News