புது டெல்லி: பாலிவுட் திரையுலகில், முன்பெல்லாம் எப்போதும் பெண் சார்ந்த படங்கள் வெளியாகி வந்தன. ஆனால் 80-களில், இந்த பெண் சார்ந்த படங்கள், ஆண் ஆதிக்கம் செலுத்தும் படங்களால் பாதிக்கப்பட்டு அவற்றின் இருப்பை இழந்தன. இருப்பினும், மீண்டும் பெண் சார்ந்த படங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. தற்போதுள்ள உள்ள புதிய தலைமுறையினர், அதாவது இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெண்களை மனதில் வைத்து கதையை உருவாக்கத் தொடங்கி உள்ளனர். பல படங்கள் பாலிவுட்டில் வெளியாகி வருகின்றன.
இதில் நன்மை என்னவென்றால், இன்று, ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லட்சுமி அகர்வாலின் கதை பார்வையாளர்களுக்கு முன்னால் உள்ளது. அவரின் உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட ‘சபாக்’ படத்தில் பாலிவுட்டின் முன்னணி பெண்களில் ஒருவரான தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் டிரெய்லரிலிருந்து, அதன் கதை என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல் அனைவருக்கும் கிடைத்தது. ஆனால் மேக்னா குல்சார் இந்த கதையை திரையில் எவ்வாறு வழங்கியுள்ளார்? பார்வையாளர்களை இந்த கதை வசீகரம் செய்ததா? என்று பார்ப்போம்.
ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை பற்றிய கதையில் தீபிகா படுகோனே (மாலதி) நடித்துள்ளதால் இந்த படத்தின் கதை அனைவரையும் ஈர்த்துள்ளது என்றே கூறவேண்டும். இயக்குனர் மேக்னா குல்சார், ‘சபாக்’ படத்தில் மால்தியின் (தீபிகா படுகோனே) சித்திரவதைகளை திரையில் சித்தரித்ததோடு மட்டுமல்லாமல், இந்த குற்றத்திற்கான தண்டனை மிகச் சிறியது என்றும், தேநீர் வீசுவதற்கும் ஆசிட் வீசுவதற்கும் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்றும் சொல்ல முயன்றுள்ளார். மாலதி தனது அடையாளத்தை (முகம்) இழந்த பிறகும், ஆசிட் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனையைப் பெறவும், அமில விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக குரல் எழுப்பவும் எப்படி போராடுகிறார்கள் என்பது ‘சபாக்’ படத்தில் காட்டப்பட்டுள்ளது.
‘சபாக்’ படத்தைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் அதன் கதை. ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான ஒரு சில நாட்களுக்குள் அந்த பெண்ணின் வாழ்க்கை எவ்வளவு மாறுகிறது மற்றும் அதிலிருந்து உயிர் பிழைத்த பெண் மீது, அது எவ்வாறு ஒரு மனவலியை ஏற்படுத்துகிறது என்பதை இயக்குனர் மேக்னா குல்சார், மிக அழகாக காட்டியுள்ளார். படத்தின் முதல் பாதியில் வரும் ஒவ்வொரு காட்சியும் உங்களை நடுங்க வைக்கும், சிந்திக்க வைக்கிறது.
தீபிகா படுகோனே தனது நடிப்பால் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவரின் வலியை, உணர வைக்கிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனைத் தவிர, விக்ராந்த் மெஸ்ஸியும் சிறப்பாக நடித்துள்ளார். ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் குறித்து விழிப்புணர்வை பரப்பும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் உங்கள் இதயத்தை வெல்லுகிறார்.
‘சபாக்’ படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும். இதுபோன்ற படங்களை ஆதரிப்பது பார்வையாளர்களின் கடமை ஆகும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.