Bigg Boss Tamil 4: பாலாவுக்காக பொங்கி கேப்ரியலாவுடன் சந்தை போட்ட சிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அமைதியாக இருந்த சிவானி, தற்போது அவரது உண்மையான ரூபத்தை காட்டி உள்ளார்.  

Last Updated : Nov 11, 2020, 06:18 PM IST
Bigg Boss Tamil 4: பாலாவுக்காக பொங்கி கேப்ரியலாவுடன் சந்தை போட்ட  சிவானி! title=

பிக் பாஸ் (Bigg Boss Tamilநிகழ்ச்சியில் இதுவரை அமைதியாக இருந்த சிவானி தற்போது அவரது உண்மையான ரூபத்தை காட்டி உள்ளார். சிவானி பாலாஜிக்காக பொங்கி, கேப்ரில்லாவிடம் அசிங்கப்பட்ட காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க் இல் பாட்டி அர்ச்சனா வைத்திருக்கும் பத்திரத்தை திருட வேண்டும் என்பது சோம்-ரம்யாவுக்கு பிக்பாஸ் கொடுத்த வேலையை கச்சிதமாக இருவரும் செய்து முடித்தனர்.

 

ALSO READ | பிக் பாஸ் பாலாவுக்கு ஆப்பு வைத்தது மிஸ்டர் இந்தியா அமைப்பகம்

இதற்கிடையில் பபாலாஜியிடம் கேப்ரில்லா த்திரம் குறித்து கேட்டு கொண்டிருக்க, அதற்கு பாலாஜி பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருந்தார். அப்போது கேப்ரில்லா, பாலாஜியிடம் ‘ஹானஸ்ட்டா பதில் சொல்லுன்னு சொன்னேன், நீ சொல்லிட்ட, அதுக்கு அப்புறம் ஒண்ணுமே சொல்லலியே’ என்று கூற அப்போது குறுக்கிட்ட சிவானி, ‘எதுக்கு ஹான்ஸ்ட்டா பதில் சொல்லனும் என்று கேள்வி எழுப்ப அதற்கு கேபிரில்லா காட்டமாக, ‘நீ எதுக்கு பேசுற, நான் அவன்கிட்ட பேசுறேன்’ என்று பதிலடி கொடுத்தார். 

அதற்கு சிவானி, ‘நீ எதுக்கு இப்ப வாய்ஸ் ரெய்ஸ் பன்ற என்று கேட்க, ஆமா அப்படித்தான் வாய்ஸ் ரெய்ஸ் பண்ணுவேன் என்ன பண்ணுவ? என்று பதிலளிக்க என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சி ஆனார் சிவானி.

இந்த லேடேஸ்ட் புரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் சிவானியும், கேபிரில்லாவும் தங்கள் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர் என்று கூறி வருகின்றனர். 

 

ALSO READ | பாலாஜியின் திருட்டை கண்டுபிடித்த பிக் பாக் 4 ஹவுஸ்மேட்ஸ்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News