#VjChitraவின் தற்கொலையில் புதிய திருப்பம்! கணவர் ஹேமந்த் கைது

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் கணவர் ஹேமந்த் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 15, 2020, 12:22 AM IST
  • சித்ரா கலகலப்பானவர், அனைவருடனும் சுமூகமாகவும், நட்புடனும் பழகுபவர். தைரியமானவர்
  • திருமணமாகி 2 மாதங்களில் சித்ரா தற்கொலை செய்துக் கொண்டார்
  • கணவருடன் ஹோட்டலில் இருந்தபோது சித்ரா தற்கொலை செய்து கொண்டார்
#VjChitraவின் தற்கொலையில் புதிய திருப்பம்! கணவர் ஹேமந்த் கைது  title=

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் கணவர் ஹேமந்த் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதியன்று நசரத்போட்டையில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது தற்கொலை செய்துக் கொண்டார்.

இதற்கு முன்னதாக சித்ராவின்  (Actress chitra) அம்மா விஜயா, ஹேமந்த் தான் மகளை அடித்துக் கொன்றுவிட்டார் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்று போலீசார் (police) ஹேமந்தை கைது செய்துள்ளனர். சித்ராவின் உடலிலும் காயங்கள் இருந்ததும் ஹேமந்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் நள்ளிரவில் சித்ரா படபிடிப்பில் இருந்து ஹோட்டலுக்கு சென்றபோது அவர் நன்றாகத் தான் இருந்தார்.
 
 
நிச்சயதார்த்தம் ஊர் கூடி செய்த நிலையில், திடீரென பதிவுத் திருமணம் செய்துக் கொண்ட காரணம் என்ன? ஏன் திருமணம் செய்துக் கொண்டதை ரகசியமாக வைத்திருந்தனர்? ஹேமந்தின் (Hemant Kumar) அழுத்தம் தான் தற்கொலைக்கு சித்ராவைத் தூண்டியதா? என பல கேள்விகள் எழுந்தன. இறுதியில் ஆர்.டி.ஓ விசாரணை நடந்துக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் ஹேமந்த் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் குடும்ப வன்முறை காரணமாக மரணம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் போலீசார் (policeவிசாரித்து வந்தனர். இன்று சித்ராவின் பெற்றோர் குடும்பத்தினரிடம் விசாராணை நடைபெற்றது. ஆறு நாட்களாக தொடர்ந்த விசாரணையில் சற்று நேரத்திற்கு முன்னதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனையில் சித்ராவின் மரணம் தற்கொலையே, கொலை அல்ல என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது.
 
 
சித்ராவின் தொலைபேசி, சமூக ஊடகங்கள் என போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டனர். சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்களும் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்தனர். 
சென்னை நசரேத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் கணவருடன் தங்கியிருந்த சித்ரா தற்கொலை செய்துக் கொண்டார்.
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News