பூசணிக்காய், பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்

மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலி கான் தனது சின்னம் பொறிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதியில் வெளிச்சம் இல்லாததால் தனது பலாப்பழச் சின்னம் மறைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 19, 2024, 03:33 PM IST
  • இன்று வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான்.
  • பூசணிக்காய் சின்னம் இவ்வளவு இருட்டா இருக்கிறது என்று கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார்.
பூசணிக்காய், பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம் title=

Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 39 மக்களவை தொகுதிக்கு மட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது. 

அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சி வேட்பாளர்கள், சாமானிய மக்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களின் தகுந்த ஆவணங்களை சமர்பித்து தங்களின் வாக்குகளை செலுத்தி ஜனநாயக உரிமையை நிலைநாட்டி வருகின்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 4ஆம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியாகும். 

அந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால் மக்கள் ஆர்வமுடன் காலை 7 மணியில் இருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணிவரை தமிழ்நாடு முழுவதும், 24.37 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியிலும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையிலும் வாக்குள் பதிவாகியிருந்தன. சென்னையின் மூன்று தொகுதிகளிலும் வழக்கம் போல் குறைவான வாக்குகளே பதிவாகி வருகின்றன.

மேலும் படிக்க | மக்கள் மனதில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு.... தொடங்கியது தேர்தல் திருவிழா!!

இதனிடையே வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி புதன்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மன்சூர் அலிகானுக்கு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான், வேலூரில் என்னை கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ், மோர் கொடுத்தாங்க. அதை குடிச்ச உடனே மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. இதையடுத்து, பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை கொடுத்தும் வலி நிக்காததால், சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூல அட்மிட் பண்ணி இருக்காங்க என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான், வாக்குச்சாவடியில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த வாக்கு சின்னத்தைப் பார்த்துவிட்டு இதில் ஏன் பலாப்பழம் மற்றும் பூசணிக்காய் சின்னம் இவ்வளவு இருட்டா இருக்கிறது என்று கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார். இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் அவரிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.

மேலும் படிக்க | வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News