அநாகரிகமாக கேள்வி கேட்ட நெட்டிசன் - பதிலடி கொடுத்த நீலிமா ராணி

நடிகை நீலிமா ராணியிடம் நெட்டிசன் ஒருவர் அநாகரிகமாக கேள்வி கேட்டதற்கு அவர் கொடுத்த பதிலடி வைரலாகிவருகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 19, 2022, 02:55 PM IST
  • தேவர் மகன் படம் மூலம் அறிமுகமானார் நீலிமா ராணி
  • ஏராளமான சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார்
  • சமீபத்தில் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொண்டார் நீலிமா ராணி
அநாகரிகமாக கேள்வி கேட்ட நெட்டிசன் - பதிலடி கொடுத்த நீலிமா ராணி title=

கமல் நடித்த தேவர் மகன் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. தொடர்ந்து அவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களிலும், துணை கதாபாத்திரத்தில் திமிரு, பாண்டவர் பூமி, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். பெரிய திரையில் பெரிதாக சோபிக்காவிட்டாலும் சின்னத்தரையில் ஆசை, மெட்டி ஒலி, வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி சீரியலில் நடித்திருந்தார்.

மேலும் படிக்க | ஏமாத்த ஒன்னும் இல்ல சேரி மக்கள்னா கெட்ட வார்த்தைதான் - பவி டீச்சரின் சர்ச்சை பேச்சு

இதற்கிடையே கர்ப்பமாக இருந்த அவர் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். தீவிர நடிப்பிலிருந்து அவர் ஒதுங்கியிருந்தாலும் சீரியல்களை தயாரிக்கும் பணிகளில் தனது கணவரோடு இணைந்து ஈடுபட்டுள்ளார். அந்தவகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களை தயாரிக்கும் அவர் தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார்.

Neelima Rani

அந்த சேனலில் ஏராளமான வீடியோக்களை பகிர்வது வழக்கம். யூட்யூப் சேனலில் ஆக்டிவ்வாக இருப்பதுபோன்று நீலிமா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் அவர் ரசிகர்களுடன் உரையாடினார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neelima Esai (@neelimaesai)

அப்போது நெட்டிசன் ஒருவர், “உங்கள் உள்ளாடை அளவு என்ன” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நீலிமா ராணி, “நான் ஏன் உனக்கு உள்ளாடை அளவை சொல்ல வேண்டும். நீ அதை விற்கப்போறியா?” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அது ஒரு கெட்ட கனவு... நடிகையை ஏமாற்றிய திரௌபதி இயக்குநர் - நடிகையின் ஒப்புதல் வாக்குமூலம்

அவரது இந்த பதிலை சமூக வலைதளவாசிகள் கொண்டாடி நீலிமாவுக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | அந்தப் பழக்கத்தை அம்மா நிறுத்தினார் நான் ஆரம்பித்துவிட்டேன்- ஸ்ரீதேவி மகள் ஓபன் டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News