கன்னட சினிமாவில் மிகவும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது இருந்தது சார்லி படம் அதற்கு காரணம் படத்தில் நடித்து இருக்கும் ரக்ஷித் ஷெட்டி சார்லி என்ற நாயும் தான்.
படத்தை கிட்ட தட்ட 5 வருடங்களாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கிரன் ராஜ்.இந்த படம் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் , இந்தி என 5 மொழிகளில் வெளியிட்டு இருக்கிறார்கள். படத்தில் கதநாயகி யாக சங்கீதா சிருங்கேரி நடித்து இருக்கிறார் இவாரல் படத்தில் எந்த தாக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதை
சிறுவயதிலேயே குடும்பத்தை இழந்த தர்மா (ரக்ஷித் ஷெட்டி) வாழ்கை மீது எந்த நாட்டம் இல்லாமல், வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது வாழ்வில், சார்லி என்ற பெண் நாய் வருகிறது.
மேலும் படிக்க | ”தங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே”- விக்கி - நயன் காதல் கதை!
ஆரம்பத்தில் நாயை விரட்டும் ஹீரோ சிறிது நாட்களில் அதை இவர் உடன் வைத்து கொள்கிறார் தர்மா, சார்லியும் தர்மாவின் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது சார்லி . சார்லி மீது அளவு கடந்த பாசம் ஹீரோ தர்மாக்கு ஒரு கட்டத்தில் சார்லிக்கு கேன்சர் இருப்பது தர்மாவிற்கு தெரிய வர, இந்த கேன்சரில் இருந்து சார்லியை தர்மா காப்பாற்றினாரா இல்லையா? அதன் பின்னரானா அவரது வாழ்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் நாய்களை மைய்யமாக நிறைய படக்கதை வந்துயிருந்தாலும் சார்லி படம் சற்று மாறுபட்ட கதை என்று சொல்லாம்.படத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்து படத்திற்க்கு பக்க பலமாக இருந்தாலும் சார்லியும் படத்திற்க்கு கூடுதல் அழகும் பார்ப்பவர்கள் கண்ணிற்க்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.
படத்தில் எமோஷனை செண்டிமெண்ட் போன்ற காட்சிகளை அருமையாக கடத்திய இயக்குநர் கிரண்ராஜூக்கு தனிபாராட்டுகள். அடுத்தாக ரக்ஷித் ஷெட்டி, முரடனாகவும் சார்லியுடனான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளும் தன் வாழ்கையை சார்லியின் மூலமாகவும் பயணத்தின் வாயிலாகவும் உணரும் காட்சிகள் அனைத்திலும். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அனைவரையும் கைத்தட்டவைக்கிறது.
இப்படி ஒரு கதையில் , இடையில் வரும் பாபி சிம்ஹா கன்னடத்தில் மிகவும் பேசப்படும் கதநாயகர் ராஜ் பி ஷெட்டி உட்பட பல கதாபாத்திரங்களுக்கு சரியாக கொடுத்து இருக்கிறார் இயக்குநர். படத்தின் நீளத்தில் சற்று கோட்டை விட்டுஇருக்கிறார்.படத்தின் நீளம் சற்று பார்வையாளர் சற்று சோர்வு அடைய வைக்கிறது.
இராண்டாம் பாதியில் பல காட்சிகள் நம்மை எமோஷனின் உச்சத்தில் கொண்டு சென்றாலும், அந்த காட்சிகளுக்கு இடையே வரும் காட்சிகள் நம்மை நெழிய வைத்துவிடுகின்றன. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன. நீளத்தை மட்டும் கொஞ்சம் சுருக்கி இருந்தால் சார்லி இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும். இந்தப் படத்தை தமிழில் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | கமல்ஹாசனின் கரியர் பெஸ்ட்டா விக்ரம்? - உண்மை நிலவரம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR