மீனாட்சி அம்மன் கோயிலுக்கு திரும்ப வருமா பேட்டரி வண்டி..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிடப்பில் போடப்பட்டுள்ள பேட்டரி வாகனத்தை மீண்டும் பயன்பாட்டு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 16, 2022, 11:55 AM IST
  • பேட்டரி வாகனத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருக
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - பக்தர்கள் கோரிக்கை
  • அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தால் வயதானவர்கள் அவதி
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு திரும்ப வருமா பேட்டரி வண்டி..! title=

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன வைரஸ் தொற்று காரணமாக பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்து போனது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது. 

Madurai temple

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மிகவும் சிறப்பாக இருக்கும்

இதனால் கொரோனாக்கு முந்தைய காலகட்டத்தில் மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்த ஐந்து பேட்டரி வாகனம் பயன்பாடு இன்றி முற்றிலும் முடங்கி மதுரை மாநகராட்சி காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது குறைந்து கொண்டே வரும் கொரோனா தொற்றால்  கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

Temple

மேலும் படிக்க | 3 நாட்களுக்கு பிறகு, இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

Car

இதன் காரணமாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்க பேட்டரி வாகனத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News