70வது குடியரசு தினம்: சிறப்பாக ஆடை அணிய அட்டகாசமான ஐடியாக்கள்!

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பான நாளினை மேலும் சிறப்பாக கொண்டாட மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

Last Updated : Jan 26, 2019, 08:44 AM IST
70வது குடியரசு தினம்: சிறப்பாக ஆடை அணிய அட்டகாசமான ஐடியாக்கள்! title=

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பான நாளினை மேலும் சிறப்பாக கொண்டாட மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார். முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் ராஜபாதையில் அனைத்து மாநில அலங்கார வாகன ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 

70 வது குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தில் தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி, தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அந்தவகையில் இந்நாளின் கொண்டாட்டத்தினை நம் பாரம்பரியத்துடன் கொண்டாடினாள் எப்படி இருக்கும்... அதற்கான சில குறிப்புகள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான சில குறிப்புகள்:

காவி நிற புடவையுடன், பச்சை ரவிக்கை அணிந்து அத்துடன் மிளிரும் முத்துப் பதித்த மாலை அணிந்துச் சென்றால்... அடடா! என்ன அழகு!

வெள்ளை நிற குர்த்தா - காவி நிற துப்பட்டா - பச்சை நிற சுடிதார்!

வெண்ணிற சுடிதார், துப்பட்டா-வுடன் மூன்று வண்ண பொட்டு மற்றும்  மூன்று வண்ண வளையல் சேர்த்து அணிந்துக்கொள்ளாம்.

நீங்கள் பாவாடை தாவனி அணிய விரும்பினால்... காவி ரவிக்கை - வெண்மைநிற பாவாடை - பச்சை நிறத்தில் துப்பட்டா அணிந்து அதற்கேற்றவாரு நகைகள் அணிந்து வந்தால் அற்புதம்

ஆண்களுக்கான் சில குறிப்புகள்:

காவி குர்த்தா - வெண்நிற பைஜாமா - பச்சை நிற துப்பட்டா சேர்பில் ஆடை அணிந்து வந்தாள் ஊரின் கண் உங்கள் மீது தான்.

பச்சை குர்த்தா அணிய விரும்பினால், அத்துடன் வெண்ணிற பைஜமா மற்றும் காவி நிற கோட் (பருத்தி ஆடையாக இருந்தால் நல்லது)!

வெள்ளை வேஸ்டியுடன், காவி குர்த்தா மற்றும் பச்சை நிற கோட் அணிந்தால் அருமை

Trending News